AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நான் பாத்து வியந்தது எல்லாமே கமல் சார் படங்கள்தான் – நடிகர் ஆசிஃப் அலி!

Actor Asif Ali talks about Kamal Haasan movies: மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆசிஃப் அலி. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் கமல் ஹாசன் படங்கள் தனக்கு எந்த அளவிற்கு பிடிக்கும் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

நான் பாத்து வியந்தது எல்லாமே கமல் சார் படங்கள்தான் – நடிகர் ஆசிஃப் அலி!
நடிகர் ஆசிஃப் அலிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Mar 2026 18:36 PM IST

மலையாள சினிமாவில் நடிகர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் ஆசிஃப் அலி. இவர் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ரிது என்ற மலையாள சினிமாவின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். சினிமாவில் நடிகராக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த ஆசிஃப் அலி அதன் பிறகு படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு நடித்தால் தொடர்ந்து நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல் சில நேரங்களில் நெகட்டிவ் வேடங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டும் இன்றி படங்களை தயாரித்தும் பாடல்கள் பாடியும் வருகிறார் ஆசிஃப் அலி. கடந்த சில ஆண்டுகளாக ஆசிஃப் அலி நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அந்த வகையில் இறுதியாக நடிகர் ஆசிஃப் அலி நடிப்பில் வெளியான படம் மிராஜ். மிஸ்ட்ரி த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அது மட்டும் இன்றி கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் ஆசிஃப் அலி நடிப்பில் அடுத்தடுத்து 4 படங்களில் நடித்து இருந்தார். அந்த 4 படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றார். இந்த நிலையில் சமீபத்தில் ஆசிஃப் அலி பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நான் பாத்து வியந்தது எல்லாமே கமல் சார் படங்கள்தான்:

அதன்படி ஆசிஃப் அலி பேசியதாவது, சினிமாவ புரிஞ்சு பாக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நான் பாத்து வியந்தது எல்லாமே கமல் ஹாசன் சார் படங்கள்தான், அவரோட காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் எதுவா இருந்தாலும் ‌நம்மால அத உணர முடியும், என்னோட எல்லா பேட்டிலையும் அவர பத்தி சொல்லாம இருக்கமாட்டேன் என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… அஜித் குமாரின் 64-வது படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இல்லையா? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் ஆசிஃப் அலி பேச்சு:

Also Read… ஜெயிலர் 2 படத்தின் இன்டர்வல் ப்ளாக் வேற லெவலில் இருக்கும் – நடிகை மிர்ணா ஓபன் டாக்

Follow Us