Cinema Rewind: நான் ஸ்கூல் படிக்கும்போதே அஜித் ரசிகை – நடிகை சினேகா!
Sneha Childhood Crush Actor : தென்னிந்திய சினிமாவில் 2000ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சினேகா. இவரின் நடிப்பில் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு எனப் பல மொழிகளில் படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் தனது சிறுவயதிலிருந்து பிடித்த நடிகர் பற்றிக் கூறியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் நடிகை சினேகா (Sneha). இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாகத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் மலையாளத்தில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான “இங்கனே ஒரு நிலபக்ஷி” (Ingane Oru Nilapakshi) என்ற படத்தில் மாசி என்ற ரோலில் நடித்து சினிமாவில் நுழைந்தார். பின் அதை தொடர்ந்து தமிழிலும் இயக்குநர் ஜே. சுரேஷ் (J Suresh) இயக்கத்தில் வெளியான என்னவளே (Ennavale) என்ற படத்தில் நடிகர் மாதவனுடன் இணைந்து நடித்து தமிழில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அஜித் முதல் விஜய் வரை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஜோடியாக நடித்து அசத்தியிருக்கிறார். மேலும் விஜய் மற்றும் சினேகா நடித்த படங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது என்றே கூறலாம்.
மேலும் விஜயின் நடிப்பில் இறுதியாக வெளியான படமான கோட் படத்தில் நடிகை சினேகா பல வருடங்களுக்குப் பின் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த 2024ம் ஆண்டு வெளியான இப்படத்தில் முன்னணி நாயகியாக இப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதி தொடர்ந்து நடிகை சினேகா படங்களில் சிறப்புக் கதாபாத்திரம் மற்றும் முக்கிய ரோல்களிலும் நடித்து வருகிறார்.
நடிகர் பிரதீப்ரங்கநாதனின் நடிப்பில் இறுதியாக வெளியான டிராகன் படத்திலும், மருத்துவர் வேடத்தில் சிறப்பு ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை சினேகா முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், தான் பள்ளி படிக்கும்போதே பிடித்த நடிகர் பற்றி ஓபனாக பேசியுள்ளார். அது யார் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.




நடிகை சினேகாவின் சிறுவயது க்ரஷ் நடிகர் :
நடிகை சினேகா முன்னதை பேசிய நேர்காணல் ஒன்றில், அவன் சிறுவயதில் பிடித்த நடிகர் யார் என்பது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு நடிகை சினேகா, “நான் நிஜமாகவே கூறுகிறேன், எனது அக்கா பயங்கர விஜய் ரசிகை. அவரின் அறையில் எங்குப் பார்த்தாலும் விஜய்யின் புகைப்படங்கள் அதிகமாக இருக்கும். ஆனால் நான் தல அஜித் குமாரின் பெரிய ரசிகை, நானும் பள்ளி பிடிக்கும்போது இருந்தே அஜித்தின் படங்களை நிறையப் பார்ப்பேன்” என்று நடிகை சினேகா கூறியிருந்தார்.
நடிகை சினேகா மற்றும் அஜித்தின் நடிப்பில் வெளியான படம் :
நடிகர் அஜித்தின் நடிப்பில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த விதத்தில் நடிகர் அஜித் நடிகை சினேகாவுடன் இணைந்து நடித்திருந்த திரைப்படம் ஜனா. இந்த படத்தை இயக்குநர் ஷாஜி கைலாஸ் இயக்கியிருந்தார். இந்த ஜனா படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்திருந்தார். இந்த படத்தில் மேலும் நடிகர்கள் ரகுவரன், ஸ்ரீவித்யா, ராதா ரவி, சிந்து உட்படப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். கடந்த 2004ம் ஆண்டு வெளியான இப்படமானது ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்குப் பின் அஜித்துடன் சினேகா வேறு இந்தப் படத்திலும் கதாநாயகியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.