இயக்குநர் பாலாவின் புதுப் படத்தின் நாயகன் இவரா? கவனம் ஈர்க்கும் தகவல்!
Director Bala Next Movie Hero Update Here | தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் பாலா. இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தில் நாயகன் யார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் இயக்குநர் பாலா (Director Bala). இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி தமிழ் மொழியில் கடந்த 1999-ம் ஆண்டு முதல் இயக்குநராக தனது பணியைத் தொடங்கியவர் இயக்குநர் பாலா. இவர் இயக்குநராக அறிமுகம் ஆன சேது படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று நுழைபவர்களுக்கு இந்தப் படம் ஒரு பாடமாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவரது இயக்கத்தில் வெளியான நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் மற்றும் வணங்கான் ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
அதன்படி இறுதியாக இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் கடந்த 2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான வணங்கான் படத்தில் நடிகர் அருண் விஜய் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.




இயக்குநர் பாலாவின் புதுப் படத்தின் நாயகன் இவரா?
அதன்படி சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, விஜய் சேதுபதியின் அடுத்த படம் இயக்குநர் பாலாவுடன் அமையவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் கடற்கரை சார்ந்த கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கான கதையை கொம்பன் பட இயக்குநர் முத்தையா எழுதியுள்ளார். திரைக்கதை மற்றும் வசனங்களை பாலா கையாளுகிறார். தற்போது கன்னியாகுமரியில் படப்பிடிப்புக்கான இடங்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இது ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… Sai Pallavi: கிளாமருக்கு முக்கியத்துவம் தரும் வேடம் வேண்டாம் – சாய் பல்லவி பேச்சு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#VijaySethupathi’s next film is reportedly with Director #Bala.
The film is said to be another coastal-based seaside story, with #Komban Director #Muthiah providing the story. #Bala will be handling the screenplay and dialogues.
Location scouting is currently underway in Kanyakumari.
Source: Valai Pechu https://t.co/yYHRg22Sv4
— Movies Singapore (@MoviesSingapore) November 28, 2026