ஓடிடியில் வெளியாகி உள்ள அசோக் செல்வனின் அன்பில் அவன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
Anbil Avan Movie OTT Review Here | தமிழ் சினிமாவில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் அன்பில் அவன். இந்த அன்பில் அவன் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனதில் இருந்து தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் வகையில் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் அசோக் செல்வன் (Ashok Selvan). இவரது நடிப்பில் தமிழ் மொழியில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து ரொமாண்டிக் ட்ராமா மற்றும் சீரியசான கதைகளை மையமாக வைத்து உருவாகும் படங்களில் நடித்து வந்த நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் இறுதியாக வெளியானது அன்பில் அவன் படம். இந்தப் படம் ரொமாண்டிக் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருந்தது. படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த அன்பில் அவன் படத்தை இயக்குநர் ஆர். கார்த்திகேயன் எழுதி இயக்கி இருந்தார்.
மேலும் இந்தப் படத்தினை தயாரிப்பு நிறுவனங்களான ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் கே.கருணாமூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் தயாரித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடித்து இருந்த நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரேவதி, கதிர்பாலு, சாபுமோன் அப்துசமத், மகா டெல்லி கணேஷ், ஜவஹர் சக்தி, ஆகாஷ் முருகன், எஸ்.தனுஷன் மற்றும் தீபன் ஆகியோர் நடித்து உள்ளனர்.
அசோக் செல்வனின் அன்பில் அவன் படத்தின் கதை என்ன?
காதலித்து திருமணம் செய்த தம்பதிகளாக உள்ளனர் அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன். இதில் மிகவும் வசதியான வீட்டில் பிறந்து வளர்ந்த ப்ரீத்தி திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்லும் இடத்தில் மிகவும் கஷ்டப்படுகிறார். அதனைப் பார்த்த அசோக் செல்வன் தனது மனைவியின் ஆசையான ஹோம் ஸ்டே பிசினஸை செய்ய முடிவு செய்கிறார். அதற்கான முயற்சியில் ஈடுபடும் அவர்களுக்கு ஒரு ராஜ குடும்பத்தை சேர்ந்தவரின் வீடு பிடித்து இருக்கிறது. அது ரேவதியின் வீடு. அந்த வீட்டை அவர் யாருக்கும் விற்க மறுக்கிறார்.




Also Read… குஜிலி மஸ்து… பாசில் ஜோசப் – அக்ஷய் குமாரின் ராவடி படத்தின் செகண்ட் சிங்கிள்!
ஆனால் அசோக் செல்வன் தனது மனைவி மீது வைத்துள்ள காதலைப் பார்த்து அவர்களுக்கு அந்த வீட்டை கொடுக்கிறார். அந்த வீட்டை வாங்கியதில் இருந்து தொடர்ந்து அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தனுக்கும் தொடர்ந்து பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கின்றது. அவை அனைத்தையும் சமாளித்து எப்படி வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள் என்பதே இந்தப் படத்தின் கதை. இந்தப் படம் தற்போது சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.