AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சூர்யாவின் சீன் திரைப்படம் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

Scene Movie OTT Release: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் 3வது வெளியான திரைப்படம்தான் சீன். மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சூர்யாவின் சீன் திரைப்படம் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?
சூர்யாவின் சீன் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 29 Nov 2026 17:08 PM IST

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் சினிமாவில் தொடர்ந்து புது புது திரைப்படங்கள் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் சீன் (Scene Movie). இதை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Director Jithu Madhavan) இயக்க, கடந்த 2026ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நசீம் (Nazriya Nazim) நடித்திருந்தார். இவர் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு சீன் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது அதிரடி கிரைம் திரில்லர் மற்றும் அதிரடி ஆக்ஷன் பாணியில் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் வரவேற்பு பின் சூர்யா புதிய படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் திரையரங்குகளில் 4வது வாரமாக வெளியாகிவரும் சீன் திரைப்படம் எப்போது?, எந்த ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அதனால் திறமையில் குறைந்தவளாகவோ உணர்வதில்லை- ஸ்ருதிஹாசன் பேச்சு!

சூர்யா மற்றும் நஸ்ரியாவின் சீன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது:

இயக்குநர் ஜித்து மாதவன் மற்றும் சூர்யாவின் கூட்டணியில் சீன் திரைப்படமானது கடந்த 2026ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படமானது விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் வித்தியாசமான கதையில் இப்படம் அமைந்திருந்தது.

இதையும் படிங்க: அப்படி நடக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை – அர்ச்சனா ரவிசந்த்ரன் ஓபன் டாக்

இந்த படமானது திரையரங்குகளில் சுமார் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்த நிலையில், தற்போது வரையிலும் திரையரங்குகளில் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமானது பெற்றிருந்த நிலையில், வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதியில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

சூர்யாவின் சீன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:


நடிகர் சூர்யா சீன் திரைப்படத்திற்கு பிறகு, ஜெய் பீம் பட இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா 48 என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க, நடிகை கயாடு லோஹர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துவரும் நிலையில், இப்படமானது 2027ம் ஆண்டு இடைபட்டகாலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us