Rashmika Manndana: மைசா படத்திற்காக 90 அடியிலிருந்து குதித்தேன் – ராஷ்மிகா மந்தனா!
Rashmika Mandannas Terrifying Myssa Stunt: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்படும் நடிகையாக இருந்துவருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் நடிப்பில் தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம்தான் மைசா. இந்த படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நிறைவுபெற்ற நிலையில், இப்படத்திற்காக தான் செய்த கஷ்டமான சாகசம் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
கன்னட சினிமாவின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா (Rashmika Manndana). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் சினிமாவில் வெளியான திரைப்படம் ரணபாலி (Ranabaali Movie). கடந்த 2026ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியான இந்த படத்தில் நடிகரும், அவரின் கணவருமான விஜய் தேவரகொண்டாவுடன் (Vijay Deverakonda) இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது இவருக்கு ஓரளவு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. மேலும் ரணபாலி படத்தில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பின், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியானது இணைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பின் ராஷ்மிகா நடித்துவந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படம்தான் மைசா (Myssa Movie). இதை தெலுங்கு இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்க, பிரம்மாண்டமான கதைக்களத்தில் தயாராகிவருகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. இப்படம் 2026ம் ஆண்டு நவம்பர் இறுதியில் வெளியாக காத்திருந்த நிலையில், பின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ராஷ்மிகா மந்தனா, இப்படத்திற்காக மிகவும் பயந்து செய்த ஸ்டண்ட் குறித்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகி உள்ள அசோக் செல்வனின் அன்பில் அவன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
மைசா படத்திற்காக கஷ்டமான ஸ்டண்ட் செய்தது பற்றி பேசிய ராஷ்மிகா மந்தனா:
அந்த நேர்காணலில் பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா, அதில் “எனக்கு எப்போதும் உயரம் என்றாலே ரொம்ப பயம். ஆனால் மைசா படத்திற்காக நான் கிட்டத்தட்ட 90 அடியிலிருந்து குதித்தேன். அவ்வாறு குதித்தபோது அதுதான் எனது முடிவு என நினைத்தேன்.
இதையும் படிங்க: விஜய் ஆண்டனியின் அடுத்தப் படத்தின் கதை எப்படி இருக்கும் தெரியுமா? வைரலாகும் தகவல்
அந்த நேரத்தில் நடக்கும் அத்தனையும் ஸ்லோ மோஷனாக நடப்பதுபோல எனக்கு தெரிந்தது. அந்த காட்சியில் பாதுகாப்பாக முடிந்த பொது, அதிர்ச்சியில் நடுங்கியபடியே எனது கண்ணிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது” என அதில் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது கைவசத்தில் அடுத்தடுத்த படங்களை வைத்துள்ளார். இவரின் நடிப்பில் மைசா என்ற படமானது சிறப்பாக தயார்க்கியுள்ள நிலையில், இன்னும் வெளியாகவில்லை. இப்படம் 2026 நவம்பர் 20ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் தொடக்கம் அல்லது இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.