AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை அனுஷ்கா ஷர்மா – எந்தப் படத்தில் தெரியுமா?

Anushka Sharma's re-entry in cinema after 8 years : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷர்மா. இவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை அனுஷ்கா ஷர்மா – எந்தப் படத்தில் தெரியுமா?
நடிகை அனுஷ்கா ஷர்மாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Mar 2026 18:05 PM IST

இந்தி சினிமாவில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியானது ரப் நே பனா தி ஜோடி என்ற படம். ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியான இந்தப் படத்தினை இயக்குநர் ஆதித்யா சோப்ரா எழுதி இயக்கி இருந்தார். இதில் நடிகர் ஷாருக் கான் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை அனுஷ்கா ஷர்மா நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படம் தான் நடிகை அனுஷ்கா ஷர்மா நாயகியாக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகை அனுஷ்கா ஷர்மா நடித்த பிறகு அவர் இந்தி சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய சினிம ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் ஷாருக் கான் மற்றும் அனுஷ்கா ஷர்மா நடிப்பில் வெளியான துஜ்மே ரப் தகதாக் என்ற பாடல் தற்போது வரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இந்தி சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா ஷர்மா நாயகியாக நடித்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு பிரபல கிரிக்கெட்டர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு வரை படங்களில் நடித்து வந்த நடிகை அனுஷ்கா ஷர்மா அதனைத் தொடர்ந்து படங்களில் நடிக்கவில்லை. அதற்கு பதிலாக அவர் படங்களை தயாரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக நடிகை அனுஷ்கா ஷர்மா படங்களில் நடித்து 8 ஆண்டுகள் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை அனுஷ்கா ஷர்மா:

இந்த நிலையில் நடிகை அனுஷ்கா ஷர்மா தொடர்ந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி அனுஷ்கா ஷர்மா இயக்குநர் அட்லி இயக்கத்தில்ந் அடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்து வரும் AA22xA6 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்தப் படத்தில் அனுஷ்கா ஷர்மா நடித்தால் அதுதான் அவரது தெலுங்கு சினிமா அறிமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தில் இருக்கும் தமிழ் சீரியல்.. அய்யனார் துணை சீரியல் எந்த இடத்தில் தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Jana Nayagan: ரசிகர்களுக்கு ஷாக் தகவல்… ஜன நாயகன் படத்தில் மியூட் செய்யப்பட்ட வசனங்கள் – சென்சார் குழு அதிரடி!

Follow Us