RJ Balaji: கருப்பு பட கதையை முதலில் விஜய் சாரிடம்தான் சொன்னேன் – உண்மையை உடைத்த ஆர்.ஜே.பாலாஜி!
Karuppu : ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம்தான் கருப்பு. இதில் சூர்யா நடித்திருக்கும் நிலையில் 2026ம் ஆண்டு மே மாதத்தில் வெளியாகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி கருப்பு பட கதையை விஜய்யிடம்தான் சொன்னதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் தமிழில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் பிரம்மாண்ட திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இதில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இந்த ஜோடி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின் ஜோடியாக, கருப்பு படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ.Balaji) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகும் 3வது படம் கருப்பு. இதற்கு முன், மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த கருப்பு படத்தை ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், சாய் அபயங்கர் (Sai Abhyankar) இசையமைத்துள்ளார். இது வரும் 2026ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதியில் வெளியாகவுள்ளது.
அந்த வகையில் தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விரைவில் தொடங்குகிறதாம். அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, கருப்பு படத்தின் கதையை முதலில் தளபதி விஜய்யிடம்தான் கூறியதாக உண்மையை தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் எடுக்க காரணம் இதுதான் – அஷ்வத் மாரிமுத்து ஓபன் டாக்!
தளபதி விஜய்யிடம் கருப்பு பட கதையை கூறியது பற்றி ஆர்.ஜே.பாலாஜி பேசிய விஷயம்:
அந்த நேர்காணலில் அவர் பேசுகையில், “நான் கருப்பு திரைப்படத்தின் கதையை கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எழுத ஆரம்பித்தேன். எனக்கு ஐடியா பெரிதாக பெரிதாக, எனக்கு இந்த படத்தில் நடிப்பதற்கு ஒரு பிக் ஸ்டார் தேவைப்பட்டார். அதனால் நான் உடனடியாக தளபதி விஜய் சாரிடம் கருப்பு பட கதையை சொன்னேன். அப்போது அவர் அந்த கதையை உடனடியாக முடிக்க முடியுமா என கேட்டார். மேலும் அவர் என்னிடம் ஒரு குடும்பக்கதையை போல படம் பண்ணலாமா?, கதையை உடனடியாக முடித்துவிடுவீர்களா என கேட்டார்.
இதையும் படிங்க: கருப்பு படத்தின் க்ளைமேக்ஸ் நிச்சயம் பவர்ஃபுல்லாக இருக்கும் – ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!
நான் அவரிடம் எனக்கு டைம் அதிகம் தேவைப்படும் என சொன்னேன். அதைத் தொடர்ந்து அவர் அரசியலுக்கு சென்றுவிட்டார். ஆனால் நான் மகிழ்ச்சியாகத்தான் இருந்தேன். ஏனென்றால் நான் அவரிடம் கதையை சொல்லி பேசியபோது, இந்த கதைக்கு பல திருப்பம் இருந்தது. மேலும் இதை சூர்யா சாரிடம் சொன்னேன். அவர் ஓகே சொல்லிவிட்டார். பின் அவருக்கு ஏற்றதுபோல கதையை மாற்றினேன்” என அதில் தெரிவித்துள்ளார்.
கருப்பு திரைப்படம் குறித்து வெளியிட்ட பதிவு:
#Karuppu – 14-05-2026🧨🧨
Blockbuster summer begins !!! 🔥🔥 pic.twitter.com/kebfioJ3Rs— RJ Balaji (@RJ_Balaji) March 18, 2026
தளபதி விஜய் தற்போது முழுமையாக அரசியல் சென்றுவிட்டார். இவரின் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ளது ஜன நாயகன். இப்படம் சில சென்சார் பிரச்சனையின் காரணமாக வெளியாகாமலே உள்ளது. மேலும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேர்தலுக்கு பிறகே இருக்கும் என்று கூறப்படுகிறது.