Pradeep Ranganthan: லவ் என்றாலே போராட்டம் தானே.. காதல் குறித்து பிரதீப் ரங்கநாதன் பரபரப்பு பேச்சு!

Pradeep Ranganathan About love Struggles: தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குநர் மற்றும் நடிகராக இருந்துவருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியின்போது காதல் குறித்து ரசிகர்கள் கேள்வி கேட்ட நிலையில், பிரதீப் ரங்கநாதன் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Pradeep Ranganthan: லவ் என்றாலே போராட்டம் தானே.. காதல் குறித்து பிரதீப் ரங்கநாதன் பரபரப்பு பேச்சு!

பிரதீப் ரங்கநாதன்

Published: 

13 Feb 2026 10:45 AM

 IST

நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) நடிப்பில் தமிழில் தொடர்நது திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் என்றால் அது டியூட் (Dude). இந்த படமானது கடந்த 2025 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இந்த படத்தில் மமிதா பைஜூ (Mamitha Baiju), ஹிருது ஹாரூன், சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany) திரைப்படமும் வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது. தற்போது தனது அடுத்த திரைப்படத்திற்கான பணிகளில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் இருந்துவருகிறார்.

மேலும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரதீப் ரங்கநாதன், அந்த நிகழ்ச்சியில் காதல் தோல்வி படங்களில் தொடர்ந்து நடிப்பதாக ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை சீரியல் ரோகிணியின் நிஜ கணவர் இவரா? வைரலாகும் போட்டோ

காதல் தோல்வி படங்களில் நடிப்பது குறித்து பிரதீப் ரங்கநாதன் :

அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதீப் ரங்கநாதன், “லவ் டுடே படம் லவ் ஃபெயிலியர் படம் இல்லையே. அதுல நாங்க கடைசில சேர்ந்துவிட்டோமே. காதல் என்றாலே போராட்டம் தான், போராட்டம் இல்லாத காதல் எங்கே இருக்கு. அதிலும் எல்லா காதலிலும் போராட்டம் இருக்கும். இப்போது 60வது வருடமாக சேர்ந்து வாழ்ந்தவர்களிடமும், காதலில் போராட்டம் இருக்கா? என்று கேட்டால், அவர்களும் பல தடைகளை கடந்துவந்தோம் என்றுதான் கூறுவார்கள். அதனால் காதல் என்றால் போராட்டம் கண்டிப்பாக இருக்கும்” என அதில் அவர் தெரிவித்திருந்தார். தற்போது இது தொடர்பான வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

காதல் குறித்து நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசிய வீடியோ பதிவு :

நடிகர் பிரதீப் ரங்கநாதன் தற்போது தனது அடுத்த திரைப்படத்திற்காக தயாராகிவருகிறார். இந்த படமானது அறிவியல் புனைகதையில் உருவாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை பிரதீப் ரங்கநான் தானே இயக்கி, அவரே ஹீரோவாகவும் நடிக்கவுள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் நானியின் தி பாரடைஸ் படத்தின் புது ரிலீஸ் தேதி இதுதான்… வைரலாகும் அப்டேட்

இந்த படத்தை புது படத்தை, டிராகன் திரைப்படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமானது தயாரிக்கவுள்ளதாம். இந்த படமானது விரைவில் உருவாகவுள்ள நிலையில், அந்த படத்திற்கான ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகளில் பிரதீப் ரங்கநாதன் பிசியாக இருந்துவருகிறார். இப்படம் குறித்த அறிவிப்பும் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.

அமெரிக்க வெளியிட்ட வரைபடத்தில் இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
ஆபரேஷன் சிந்தூரின் போது தாக்கப்பட்ட விமான படைத்தளங்களை சீரமைக்கும் பாகிஸ்தான்
ஆவேசம் 2 படம் ரிலீஸ் எப்போது? நடிகர் ஃபஹத் ஃபாசில் கொடுத்த அப்டேட்
ஒரு சக்தி என் உடலுக்குள் நுழைந்தது.. நடிகை சுதா சந்திரன் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்