AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: கில், சூர்யகுமார் யாதவ் நீக்கம்.. ஒலிம்பிக்கிற்கு 30 உத்தேச வீரர்கள் பட்டியலை தயார் செய்த பிசிசிஐ!

Vaibhav Sooryavanshi Team India Squad: 2028 டி20 உலகக் கோப்பை திட்டங்களிலிருந்து சூர்யகுமார் யாதவை பிசிசிஐ நீக்கியுள்ளது. இது, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்கு யார் கேப்டனாக இருப்பார் என்ற கேள்வியை எழுப்புகிறது. ஷ்ரேயஸ் ஐயர், திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் என 3 முக்கிய பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

Team India: கில், சூர்யகுமார் யாதவ் நீக்கம்.. ஒலிம்பிக்கிற்கு 30 உத்தேச வீரர்கள் பட்டியலை தயார் செய்த பிசிசிஐ!
வைபவ் சூர்யவன்ஷி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 May 2026 19:37 PM IST

வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) விரைவில் இந்திய அணிக்காக (Indian Cricket Team) அறிமுகம் வாய்ப்பை பிசிசிஐ வழங்கியுள்ளது. அதன்படி, வருகின்ற 2026  செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்காக, இந்திய அணியின் உத்தேசமாக விளையாட வாய்ப்புள்ள 30 வீரர்கள் கொண்ட பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், வைபவ் சூர்யவன்ஷி பெயர் சேர்க்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில், இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ: விரைவில் முடியும் ஐபிஎல்.. அடுத்த 6 நாட்களில் சர்வதேச போட்டி.. இந்திய அணியின் அட்டவணை இதோ!

இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு:

பிடிஐ செய்தி நிறுவனத்தின்படி, இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு 30 உத்தேச வீரர்கள் அடங்கிய பட்டியலை பிசிசிஐ அனுப்பியுள்ளது. இதற்கு, பிசிசிஐ 2 டி20 அணிகளைத் தேர்வு செய்யும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு அணி வருகின்ற 2026 செப்டம்பர் 19 முதல்  2026 அக்டோபர் 4 வரை ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடும். இந்தக் காலகட்டத்தில், மற்றொரு அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்திய சுற்றுப்பயணம் வருகின்ற 2026 செப்டம்பர் 27 முதல் 2026 அக்டோபர் 17 வரை நடைபெறும். இதில், இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும்.

ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன் ஆவாரா?

சூர்யகுமார் யாதவ் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாட மாட்டார். பிடிஐ செய்திப்படி, 2028 டி20 உலகக் கோப்பை திட்டங்களிலிருந்து சூர்யகுமார் யாதவை பிசிசிஐ நீக்கியுள்ளது. இது, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்கு யார் கேப்டனாக இருப்பார் என்ற கேள்வியை எழுப்புகிறது. ஷ்ரேயஸ் ஐயர், திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் என 3 முக்கிய பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அதேநேரத்தில்,  நியூசிலாந்துக்கு எதிரான தொடரின்போது காயமடைந்த ஹர்ஷித் ராணா, ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குள் முழு உடற்தகுதி பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுவதால், உத்தேசமாக விளையாடவிருக்கும் 30 வீரர்கள் அடங்கிய பட்டியலில் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.

ALSO READ: ரஷீத் கான் இல்லை.. இந்திய தொடருக்கு எதிரான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

30 சாத்தியமான வீரர்கள் பட்டியல்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் சிங் பாண்டியா, ரிங்கு சிங், திலக் வர்மா, அர்ஷ்தீப் பட்ரஹேல், அர்ஷ்தீப் பட்ரஹெல், அர்ஷ்தீப் பட்ரஹெல். நிதிஷ் குமார் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி, அனுகுல் ராய், ஆயுஷ் படோனி, ஹர்ஷ் துபே, துருவ் ஜூரல், கலீல் அகமது, ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய், ஷாபாஸ் அகமது, சிவம் துபே, விப்ராஜ் நிகம், ஹர்ஷித் ராணா, யாஷ் தாகூர்

Follow Us