AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Seyon: சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் கேமியோ வேடத்தில் கோலிவுட் பிரபலம்.. அட இவரா?

Seyon Movie Update: சிவகார்த்திகேயன், சிவகுமார் முருகேசனின் கூட்டணியில் உருவாகவுள்ள படம்தான் சேயோன். இந்த படமானது முருகன் மற்றும் விருமாண்டி போன்ற தெய்வங்களின் கதையை மையமாக கொண்டு இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தின் பிரபல உச்ச நடிகர் கேமியோ வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அது யார் என்பது குறித்து பார்க்கலாம்.

Seyon: சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் கேமியோ வேடத்தில் கோலிவுட் பிரபலம்.. அட இவரா?
சிவகார்த்திகேயனின் சேயோன் படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 17 Mar 2026 16:55 PM IST

தமிழ் சினிமாவில் காமெடியன், துணை நடிகராக நுழைந்து தற்போது முன்னணி கதாநாயகனாக படங்களில் நடித்துவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பராசக்தி (Parasakthi). இதை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கியிருந்த நிலையில், கடந்த 2026 ஜனவரி மாதத்தில் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக சிவகார்த்திகேயன் இணைந்துள்ள படம்தான் சேயோன் (Seyon). இதை தாய் கிழவி (Thaai Kizhavi) படத்தை இயக்கியிருந்த அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்கவுள்ளாராம். இதில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, கமல் ஹாசனின் (Kamal Haasan) ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளது.

இப்படத்தின் அறிவிப்பு புரோமோ வீடியோ கடந்த 2025 பிப்ரவரி மதஹத்தில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இந்நிலையில் இதன் ப்ரீ- ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இதிலிருந்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஹேப்பி ராஜ் படம் உங்களை அழவைக்கும், சிரிக்கவும் வைக்கும் – ஜி..வி. பிரகாஷ் குமார் பேச்சு!

சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் கேமியோ வேடத்தில் பிரபல நடிகர்:

சிவகார்த்திகேயனின் சேயோன் படமானது முற்றிலும் கிராமத்து பின்னணியில், தெய்வங்களை மையமாக கொண்டு இயக்கப்படவுள்ளதாம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டோலிவுட் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் காந்தா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் கேமியோ வேடத்தில் நடிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: கருப்பன் வரான் வழி மறிக்காதே.. கருப்பு படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்!

இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கும் நிலையில், அவரே கேமியோ வேடத்திலும் நடிக்கவுள்ளாராம். கமல்ஹாசன் ஏற்கனவே விருமாண்டி படத்தில் நடித்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதுபோலவே இந்த சேயோன் படமும் தயாராகிவரும் நிலையில், கமல்ஹாசன் இதில் சிறப்பு வேடத்தில் நடிக்கிறாராம்.

சேயோன் திரைப்படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட எக்ஸ் பதிவு:

இந்த் சேயோன் படத்தை படக்குழு வரும் 2026 அக்டோபர் மாதத்தில், சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது. ஆனால் இன்னும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடங்கவில்லை. இப்படத்தின் ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயன் முழு மூச்சாக, ஒரே அட்டவணையில் நடிப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 2026 ஏப்ரல் மாதம் முதல் இடத்ன் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us