D55 Movie: தனுஷின் ‘டி55’ பட ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? – வைரலாகும் தகவல்!

D55 Movie Shooting Update: நடிகர் தனுஷின் நடிப்பில் மிக பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகவுள்ளது டி55 படம். இதை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகள் சமீபத்தில் நடந்த நிலையில், எப்போது ஷூட்டிங் தொடங்குகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

D55 Movie: தனுஷின் டி55 பட ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? - வைரலாகும் தகவல்!

தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி

Updated On: 

19 Feb 2026 16:06 PM

 IST

கோலிவுட் சினிமாவையும் கடந்து, பான் இந்திய மக்களிடையே பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் தமிழில் இட்லி கடை (Idli Kadai), தெலுங்கில் குபேரா (Kuberaa) மற்றும் இந்தியில் தேரே இஷ்க் மே (Tere Ishq Mein) என கிட்டத்தட்ட 3 திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. இதில் தனுஷிற்கு இந்தியில் வெளியான தேரே இஷ்க் மே படமானது எதிர்பாராத வரவேற்பைக் கொடுத்திருந்தது. இதையடுத்து, சரத்குமார் மற்றும் அசோக் செல்வனின் போர் தொழில் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜாவுடன் (Vignesh Raja) புது படத்தில் இணைந்திருந்தார். இப்படத்திற்கு கர (Kara) என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது. இதைத் தொடர்ந்து தனுஷ் இணைந்துள்ள இயக்குநர்தான் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periasamy).

அமரன் திரைப்படத்தை இயக்கிய இவருடன், தனுஷ் இணைந்துள்ள புது படம் தற்காலிகமாக டி55 (D55) என அழைக்கப்பட்டுவருகிறது. இப்படத்தின் பூஜைகள் சமீபத்தில் நடந்த நிலையில், ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகிவருகிறது.

இதையும் படிங்க: சிம்புவின் அரசன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகை சைத்ரா ஆச்சர்

தனுஷின் டி55 பட ஷூட்டிங் எப்போது தொடக்கம் :

இந்த டி55 படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். சாய் பல்லவியுடன் ஏற்கனவே மாரி 2 படத்தில் தனுஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் இரண்டாவது முறையாக இந்த ஜோடி இணைந்துள்ளது. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் மலையாள சினிமாவின் முன்னணி நாயகன் மம்முட்டியும் சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளார். ஆக மொத்தத்தில் இப்படமானது மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வேள்பாரி படத்தில் நடிக்கும் நடிகர் தனுஷ்? சங்கரின் ப்ளான் என்ன

அந்த விதத்தில் இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் வரும் 2026 பிப்ரவரி 20ம் தேதியில் சென்னையில் தொடங்குகிறதாம். சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் 10 நாட்களுக்கு நடக்கும் நிலையில், அதைத் தொடர்ந்து திருப்பதியில் அடுத்தகட்ட ஷூட்டிங் நடைபெறவுள்ளதாம். தனுஷின் இப்படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் மம்முட்டி, சில நாட்களுக்கு பின் இணைவதாக கூறப்படுகிறது.

தனுஷின் டி55 பட ஷூட்டிங் குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு :

இந்த டி55 படமானது ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் தயாராகவுள்ளது. இதற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ள நிலையில், தனுஷின் ஒண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர். டேக் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்துவருகிறது. இப்படத்தை படக்குழு வரும் 2027ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிட திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது.

வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களில் Emergency Quota .. எத்தனை சீட்கள் ஒதுக்கப்படும்?
மணமகளின் பையை திருடிச் சென்ற நபர்.. ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி கொள்ளை..
சந்தேகத்தின் பெயரில் காதலியை கொலைசெய்த காதலன்
ஏப்.30 வரை "ஜனநாயகன்" வெளியாக வாய்ப்பில்லை - ரசிகர்கள் அதிர்ச்சி!