AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Retta Thala: ரெட்டை வேடத்தில் அருண் விஜய்.. அதிரடியாக வெளியானது ரெட்ட தல படத்தின் ட்ரெய்லர்!

Retta Thala Trailer: நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் கூட்டணியில் தயாராகியுள்ள படம்தான் ரெட்ட தல. இப்படமானது வரும் 2025 டிசம்பர் 25ம் தேதியில் கிறித்துமஸ் பண்டிகையோடு வெளியாகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கிய நிலையில், படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடியாக வெளியான ட்ரெய்லர் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Retta Thala: ரெட்டை வேடத்தில் அருண் விஜய்.. அதிரடியாக வெளியானது ரெட்ட தல படத்தின் ட்ரெய்லர்!
ரெட்ட தல படத்தின் ட்ரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 15 Dec 2025 18:18 PM IST

கோலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவர்தான் அருண் விஜய் (Arun VIjay). இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் மட்டும் இதுவரை 2 படங்ககள் வெளியாகியுள்ளது. இயக்குநர் பாலா (Bala) இயக்கத்தில் வணங்கான் (Vanangaan) படத்திலும், தனுஷின் (Dhanush) இயக்கத்தில் இட்லி கடை (Idli Kadai) போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த இரு படங்களும் இவருக்கு சிறப்பான வரவேற்பையே கொடுத்திருந்தது. இதை அடுத்து 3வது வெளியாகி காத்திருக்கும் படம்தான் ரெட்ட தல (Retta Thala). இந்த படத்தை இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் (Krish Thirukumaran) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே மான் கராத்தே மற்றும் கெத்து போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவரின் இயக்கத்தில் இந்த ரெட்ட தல படமானது அதிரடி கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அருண் விஜய் ரெட்டை வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், அவரே நெகடிவ் மற்றும் ஹீரோவாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படமானது வரும் 2025 டிசம்பர் 25ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீஸிற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: சூர்யாவின் கருப்பு சாட்டிலைட் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அருண் விஜய்யின் ரெட்ட தல படக்குழு வெளியிட்ட ட்ரெய்லர் பதிவு :

இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிக்க, இரு கதாநாயகிகள் சித்தி இத்னானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் இணைந்து நடித்துள்ளனர். மேலும் நடிகர்கள் ஜான் விஜய், யோகி சாமி மற்றும் பாலாஜி முருகதாஸ் போன்ற நடிகர்கள் இணைந்து அதிரடி வேடத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படம் முதலில் 2025 டிசம்பர் 18ம் தேதியில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், பின் 2025 டிசம்பர் 25ல் வெளியாகவும் என படக்குழு அறிவித்திருந்தது.

இதையும் படிங்க: வா வாத்தியார் படம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு

மேலும் இப்படத்தின் வெளியீட்டிற்கு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இப்படத்தின் சென்சார் அப்டேட்டும் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படைத்தற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தை 13 முதல் 16 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மட்டும் பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியான ட்ரெய்லர் ரசிகர்களிடையே மேலும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

Follow Us