Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Retta Thala: அருண் விஜய்யின் ஆக்ஷன் பீக்… ‘ரெட்ட தல’ படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகிறது தெரியுமா?

Retta Thala Trailer :தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர்தான் அருண் விஜய். இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் படம்தான் ரெட்ட தல. இந்த படமானது வரும் 2025ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகின்ற நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Retta Thala: அருண் விஜய்யின் ஆக்ஷன் பீக்… ‘ரெட்ட தல’ படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகிறது தெரியுமா?
அருண் விஜய்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 14 Dec 2025 20:58 PM IST

நடிகர் அருண் விஜய்யின் (Arun Vijay) நடிப்பில் 2025ம் ஆண்டில் இதுவரை 2 படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் முதலில் வெளியாகியிருந்த படம்தான் வணங்கான் (Vanagaan). இப்படத்தை இயக்குநர் பாலா (Bala) இயக்கியிருந்தார். இப்படம் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் இட்லி கடை(Idli Kadai) என்ற படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தை நடிகர் தனுஷ் (Dhanush) இயக்கி ஹீரோவாக நடிக்க, அதில் நெகடிவ் வேடத்தில் அருண் விஜய் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் 3வது திரைப்படம்தான் ரெட்ட தல (Retta Thala). இப்படத்தை இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் (Kirish Thirukumaran) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் மான் கராத்தே மற்றும் உதயநிதி ஸ்டாலினின் கெத்து (Gethu) என்ற படத்தை இயக்கியிருந்தார். அதை அடுத்ததாக பல ஆண்டுகளுக்கு பின் அருண் விஜய்யின் இந்த ரெட்ட தல படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படமானது வரும் 2025ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையோடு வெளியாகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில், இப்படத்தின் டிரெயிலர் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ரெட்ட தல படத்தின் ட்ரெய்லர் நாளை 2025 டிசம்பர் 15ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஜன நாயகன் பட ரிலீஸில் எந்த மாற்றமும் இல்லை – வைரலாகும் தகவல்

ரெட்ட தல படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு

ரெட்ட தல படத்தின் ப்ரீ புக்கிங் எப்போது ஆரம்பம் :

அருண் விஜய்யின் ரெட்ட தல படமானது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்துள்ளது. அதில் அவர் ரெட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவருடன் படத்தில் நடிகர்கள் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி, பாலாஜி முருகதாஸ், யோகி சாமி மற்றும் ஜான் விஜய் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்திருந்த நிலையில், இதுவரை 3 பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: AK64 கார் ரேஸ் படமா? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்!

இப்படம் முதலில் 2025 டிசம்பர் 18ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின் சில காரணங்களால் இப்படம் 2025 டிசம்பர் 25ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்துடன் வெளியாகவிருந்த LIK படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிபோகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ரெட்ட தல படத்தின் டிக்கெட் ப்ரீ-புக்கிங் வரும் 2025 டிசம்பர் 20ம் தேதி அல்லது 21ம் தேதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.