Ajith Kumar: அஜித்தின் 64வது படம்.. அப்டேட் எப்போது? – வெளியான புது தகவல்!
Ajith Kumars AK64 Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வருபவர் அஜித் குமார். இவரின் நடிப்பில் சுமார் 63 படங்களை வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. இந்நிலையில் இதை தொடர்ந்து ,அவர் நடிக்கவிருக்கும் AK64 திரைப்படம் பற்றி, அஜித் குமாரின் மேலாளர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். தற்போது இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிற்து.

கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருப்பவர்தான் அஜித் குமார் (Ajith Kumar). இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படமானது கடந்த 2025, ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்திருந்தார். அஜித் குமாரின் ரசிகர்களுக்கு ஏற்ற திரைப்படமாக இந்த குட் பேட் அக்லி படமானது அமைந்திருந்தது என்றே கூறலாம். இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியிருந்தார். அவர் இதற்கு முன் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படத்தை இயக்கி ஹிட் கொடுத்திருந்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்துதான் அஜித்துடன் கைகோர்த்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் அஜித் குமார் தனது 64வது திரைப்படத்தில், லக்கி இயக்குநர் ஒருவருடன் இணையுள்ளதாக கூறியிருந்தார்.
அந்த லக்கி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் என கோலிவுட் வட்டாரங்கள் கூறிவருகிறது. இந்நிலையில், இப்படத்தை பற்றி அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா (Suresh Chandra) அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்க பயோவில் AK 64 திரைப்படத்தின் அறிவிப்புகள் விரைவில் என்ற அப்டேட் கொடுத்துள்ளார். இது தற்போது அஜித் குமாரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிற்து. மேலும் “ஏ.கே. 64 படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகவும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா எக்ஸ் பயோ :
#Ajithkumar‘s Manager SureshChandra updated his bio with #AK64 Announcement Soon🔥🔥 pic.twitter.com/SC1tWW9bG3
— AmuthaBharathi (@CinemaWithAB) June 27, 2025
அஜித் குமாரின் 64-வது திரைப்படம் :
நடிகர் அஜித் குமாரின் 64வது திரைப்படத்தையும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தை தமிழ் பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டெர்நேஷனல் தயாரிப்பு நிறுவனமானது தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது . குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி என இரு படங்களிலும் நடிகை த்ரிஷா நடித்திருந்த நிலையில், அஜித்தின் 64வது படத்தில் பிரபல நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இவர் கேஜிஎப் படத்தில் நடித்து பான் இந்தியா அளவிற்கு பிரபலமானாவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தமிழில் நடிகர் விக்ரமின் கோப்ரா படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025, நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாம். மேலும் இப்படத்தை படக்குழு வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிடுவதற்கும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விரைவில் இப்படத்தை பெரிய அறிவிப்புகள் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்களிலும் தகவல்கள் பரவி வருகிறது.
கார் ரேஸிங்கில் அஜித் குமார் :
நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து, சமீப காலமாக கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொண்டு வருகிறார். இதுவரை 4 போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறார். உலகநாடுகளுக்கிடையே நடைபெறும் இந்த போட்டிகளில், இந்தியாவின் சார்பாக தனது அணியுடன் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அஜித் குமாரின் நியூ லுக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.
அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் குமார் மொட்டை தலையுடன் இருப்பதுபோல இருந்தது. மேலும் கார் ரேஸ் பந்தையத்தில் தீவிரமாக இருக்கும் அஜித் குமார் வரும் 2025, நவம்பர் மாதத்தில் தனது புதிய திரைப்படத்தில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.