Sasikumar : அதர்வாவின் ‘டிஎன்ஏ’ திரைப்படம்.. பாராட்டி தள்ளிய சசிகுமார்!
Sasikumar Congratulates DNA Movie Crew : நடிகர் மற்றும் இயக்குநராக சினிமாவில் கலக்கி வருபவர் சசிகுமார். இவரின் நடிப்பில் இறுதியாக டூரிஸ்ட் பேமிலி படம் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருந்தது. இந்நிலையில், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும், அதர்வாவின் டிஎன்ஏ படக்குழுவிற்கு, நடிகர் சசிகுமார் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வண்ணம் எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம்வருபவர் சசிகுமார் (Sasikumar). இவரின் நடிப்பில் இறுதியாக தமிழில் வெளியான திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி (Tourist Family). இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்த நிலையில், கதாநாயகியாக சிம்ரன் (Simran) நடித்திருந்தார். கடந்த 2025 மே மாதத்தில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தைப் போல தற்போது திரைப்பட ரசிகர்களும், அனைத்து வகையான படங்களையும் திரையரங்குகளுக்குச் சென்று பார்க்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், இந்த படத்தைப் போல் சமீபத்தில் வெளியான படம்தான் டிஎன்ஏ. நடிகர் அதர்வாவின் (Athrvaa) முன்னணி நடிப்பில் வெளியாகியிருந்த இப்படத்தை, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் (Nelson Venkatesan) இயக்கியிருந்தார். இதில் அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை நிமிஷா சஜயனும் (Nimisha Sajayan) நடித்திருந்தார்.
அதிரடி திரில்லர் திரைப்படமாக வெளியாகியிருந்த இப்படத்திற்கு, மக்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு நடித்தார் சசிகுமார் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளைத் தெரிவிக்கும் வண்ணம் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.




டிஎன்ஏ படத்தை வாழ்த்தி சசிகுமார் வெளியிட்ட பதிவு :
#DNAMovie Again with new plot from #nelsonvenkatesan
Well performed by @Atharvaamurali & #Nimisha
Best wishes to the team 👍 #DNA @Olympiamovis @Maanasa_chou @GhibranVaibodha @proyuvraaj pic.twitter.com/6E9nTwUAQv— M.Sasikumar (@SasikumarDir) June 26, 2025
இந்த பதிவில் நடிகர் சசிகுமார், “இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய கதைக்களத்துடன் டிஎன்ஏ படம் வெளியாகியிருக்கிறது. மேலும் இப்படத்தில் அதர்வா மற்றும் நிமிஷா சஜயனின் நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது. மேலும் இந்த டிஎன்ஏ படக்குழுவிற்குச் சிறப்பான வாழ்த்துக்கள்” என நடிகர் சசிகுமார் அதில் எழுதியுள்ளார்.
சசிகுமாரின் புதிய திரைப்படம் :
நடிகர் சசிகுமார் டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் நடித்துள்ளார். அந்த படம் வேறுஎதுவுமில்லை ப்ரீடம் திரைப்படம்தான். இந்த படத்தை இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ளார். இவர் தமிழில் கழுகு திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த ப்ரீடம் திரைப்படமானது இலங்கைத் தமிழர்களின் கதையை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் சசிகுமார் அதிரடி ஆக்ஷ்ன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இதில் சசிகுமாருக்கு ஜோடியாக, ஜெய் பீம் படத்தில் நடித்த நடிகை லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. மேலும் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், வரும் 2025, ஜூலை 10ம் தேதியில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை போல வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.