Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kannappa : ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை.. கண்ணப்பா படக்குழு எச்சரிக்கை!

Kannappa Movie Crew Troll Warning : தெலுங்கு தயாரிப்பாளர் விஷ்ணு மஞ்சுவின் முன்னணி நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் கண்ணப்பா. இந்த படமானது பான் இந்திய மொழியில் உருவாகியிருக்கும் நிலையில், 2025, ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தை ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கண்ணப்பா படக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Kannappa : ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை.. கண்ணப்பா படக்குழு எச்சரிக்கை!
கண்ணப்பா திரைப்படம்Image Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 26 Jun 2025 20:11 PM

பான் இந்திய மொழிகளில் உருவாகியிருக்கும் வரலாறு காவியம்தான் கண்ணப்பா (Kannappa) . இந்த படத்தைத் தெலுங்கு இயக்குநர் முகேஷ் குமார் சிங்  (Mukesh Kumar Singh) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படமானது இந்துக்களின் வரலாற்றுக் காவியமான கண்ணப்பனின்  (Kannappan) வாழ்க்கை வரலாற்றைப் படமாக உருவாகியிருக்கிறது. இந்த படமானது கண்ணப்பனின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் நிலையில், இப்படத்தின் கதையைத் தயாரிப்பாளரும் நடிகருமான விஷ்ணு மஞ்சுவே (Vishnu Manchu) எழுதியுள்ளார். மேலும் இப்படத்தில் கண்ணப்பன் வேடத்தில் கதாநாயகனாகவும் விஷ்ணு மஞ்சுதான் நடித்துள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்து வந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

இந்த கண்ணப்பன் படத்தில் பிரபாஸ் (Prabhas) , மோகன்லால் (Mohanlal) , அக்ஷய்குமார் (Akshay Kumar), சரத்குமார்  (sarathkumar) என பான் இந்திய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது 2025, ஜூன் 27ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படக்குழு இப்படத்தை ட்ரோல் (Troll)  செய்தல், செய்தவர்களின் மீது சட்டப்படியாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் என எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

கண்ணப்பா படக்குழு வெளியிட்ட எச்சரிக்கை பதிவு :

அந்த அறிவிப்பில், கண்ணப்பா திரைப்படமானது வரும் 2025, ஜூன் 27ம் தேதி முதல் உலகமெங்கும் அமைதியாக வெளியாகிறது. இந்த திரைப்படத்தையோ அல்லது படக்குழுவையோ பற்றி அவதூறாக தகவல்களைப் பரப்பினால் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் இப்படமானது பொதுமக்களுடன் அதிகளவு தொடர்புப்படுத்தும் வகையில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இப்படத்திற்குத் தவறான விமர்சனங்கள் மற்றும் உள்நோக்கத்துடன் முன்கூட்டியே அவதூறு பரப்பவேண்டாம் என்றும், படத்தைப் பார்த்து, அதை பாராட்டிய பிறகு கருத்துக்களைத் தெரிவித்தால் போதும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தவறான கருத்துக்களைப் பரப்பினால் நிச்சயமாகத் தக்க சட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்ணப்பா படத்தில் பான் இந்திய நடிகர்கள் :

இந்த கண்ணப்பா-படத்தில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாம் மற்றும் கன்னடம் என பல்வேறு மொழி நடிகர்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மோகன் லால் முதல் அக்ஷய்குமார் வரை பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் கண்ணப்பன் வேடத்தில் நடிகர் விஷ்ணு மஞ்சு நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாகத் தமிழ் நடிகை பிரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இப்படத்தின் பிரீமியர் காட்சிகள் இன்று 2025, ஜூன் 26 தேதியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2025, ஜூன் 27ம் தேதியில் உலகமெங்கும் திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.