Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Soori: சந்தோஷமும் சிரிப்பும் கலந்த இடம் வீடு.. ‘3BHK’ படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி!

Soori Congratulates 3BHK Movie Crew : தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் கதாநாயகனாக இருந்து வருபவர் சூரி. இவர் தமிழில் கதாநாயகனாகப் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் சித்தார்த் மற்றும் சரத்குமாரின் நடிப்பில் உருவாகியிருக்கும் 3BHK திரைப்பட குழுவிற்கு, சூரி வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பக்க பதிவை வெளியிட்டுள்ளார்.

Soori: சந்தோஷமும் சிரிப்பும் கலந்த இடம் வீடு.. ‘3BHK’ படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி!
3BHK படக்குழுவை பாராட்டிய சூரிImage Source: X
barath-murugan
Barath Murugan | Published: 26 Jun 2025 19:00 PM

நடிகர்கள் சரத்குமார் (Sarathkumar)  மற்றும் சித்தார்த்தின் (Siddharth) முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் 3 BHK. இந்த படத்தை 8 தோட்டாக்கள் (8 Thottakal ) என்ற திரைப்படத்தை இயக்கி சினிமாவில் இயக்குநராக அறிமுகமான, இயக்குநர் ஸ்ரீ கணேஷ்  (Sri Ganesh) இயக்கியுள்ளார். இந்த படமானது முற்றிலும் மிடில் கிளாஸ் குடும்பத்தின் மாறுபட்ட கதையைக் கொண்ட திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தில் சரத்குமாரின் மனைவி கதாபாத்திரத்தில், நடிகை தேவயானி (Devayani) நடித்துள்ளார். சூர்ய வம்சம் படத்தைத் தொடர்ந்து பல வருடங்களுக்குப் பின் மீண்டும் சரத்குமாருடன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் சித்தார்த்தின் 40வது திரைப்படமாக அறிவிக்கப்பட்ட 3 BHK பீல் குட் படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தில் சித்தார்த் பல்வேறு கோணங்களில் நடித்துள்ளார். பள்ளி மாணவன், கல்லூரி மாணவன் மற்றும் வேலைக்குச் செல்லும் ஆண் என  நடித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி இன்று 2025, ஜூன் 26ம்தேதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரவி மோகன் (Ravi Mohan)  கலந்துகொண்டார். இந்நிலையில் நடிகர் சூரி (Soori) இப்படத்தின் குழுவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

3BHK படக்குழுவை வாழ்த்தி நடிகர் சூரி வெளியிட்ட பதிவு :

அந்த பதிவில் நடிகர் சூரி, “ஒரு வீடு ஒரு கனவு, வீடு என்பது தனக்குச் சந்தோசம் மற்றும் சிறப்பு கலந்த இடம். இந்த 3BHK படத்தின் உணர்ச்சிகள் மிகுந்த பயணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பேசியுள்ளார். மேலும் உங்களின் கனவு நிஜமாகி உயர்ந்த வெற்றியைத் தொடட்டும்” என நடிகர் சூரி 3 BHKபடக்குழுவிற்குத் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சூரியின் புதிய திரைப்படம் ;

நடிகர் சூரியின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாமன். இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான இப்படமானது பிரம்மாண்ட வெற்றியைப் பெற்று சாதனை படைத்திருந்தது. இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். இந்த படமானது அக்கா மற்றும் தம்பியின் எமோஷனல் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து அதிரடி ஆக்ஷ்ன் படமான மண்டாடி திரைப்படத்தில் நடிகர் சூரி நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இப்படத்தை இயக்கி வருகிறர். இதைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜின் தயாரிப்பிலும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.