AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

TVK Exit Poll Result: ஆட்சி அதிகார கனவில் தவெக.. 40 தொகுதிகளே கை கொடுக்க வாய்ப்பு.. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த கருத்துக் கணிப்பு!

TVK Tamil Nadu Assembly Election Exit Poll Results 2026 : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில், தமிழக வெற்றிக் கழகம் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெரும். எவ்வளவு வாக்கு சதவீதம் பெறும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

TVK Exit Poll Result: ஆட்சி அதிகார கனவில் தவெக.. 40 தொகுதிகளே கை கொடுக்க வாய்ப்பு.. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த கருத்துக் கணிப்பு!
தவெக எத்தனை தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 29 Apr 2026 20:56 PM IST

தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் சட்டமன்ற தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எடுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த முடிவுகள் அனைத்தும் இன்று புதன்கிழமை ( ஏப்ரல் 29) வெளியிடப்பட்டது. இதில், தமிழக அரசியல் களத்துக்கு புதிய வரவான நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது குறித்த கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், தமிழக வெற்றிக் கழகம் சுமார் 4 முதல் 40 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பல்வேறு அமைப்புகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்த முழு விவரத்தை பார்க்கலாம். இதில், சாணக்யா ஸ்டாட்டடிஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தமிழக வெற்றி கழகம் 13 முதல் 18 தொகுதிகளிலும், பீப்பிள்ஸ் பல்ஸ் – 18 முதல் 24 தொகுதிகளிலும், என். டி. டி. வி. பீப்பிள்ஸ் பல்ஸ் – 18 முதல் 24 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.

4 முதல் 40 தொகுதிகள் வரை வெற்றி வாய்ப்பு

இதே போல, மேட்ரிஸ் – 10 முதல் 12 தொகுதிகளிலும், ரிபப்ளிக் பி மார்க் – 16 முதல் 26 தொகுதிகளிலும், அக்னி நியூ சர்வீஸ் – 1 தொகுதியிலும், பீப்புள் இன்சைட் – 30 முதல் 40 தொகுதிகளிலும், பீப்புள் பல்ஸ் 18 முதல் 24 தொகுதிகளிலும், ஜேவிசி டைம்ஸ் நவ் – 8 முதல் 15 தொகுதிகளிலும், வோட் வைப் – 4 முதல் 10 தொகுதிகளிலும், சி.என்.என்.நியூஸ் 18 – 4 முதல் 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருந்து வந்த விஜய், தனது பெயரிலான மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் என மாற்றி கடந்த 2024- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சியை தொடங்கினார்.

மேலும் படிக்க: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை… 1,000 அரசு ஊழியர்களுக்குத் தீவிர பயிற்சி!

சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்த தவெக

அப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்கு என கூறிய விஜய் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். இதில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டுள்ளது. அத்துடன், இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், விஜய் முதல்வராக வருவார் என்றும் அந்தக் கட்சியினர் கூறி வருகின்றனர். அத்துடன், சுமார் 40 சதவீதம் வாக்கு வங்கியை தமிழக வெற்றிக் கழகம் பெரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை

தற்போது, வெளியான கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகம் குறைந்தது 4 தொகுதிகள் முதல் அதிகபட்சமாக 40 தொகுதிகள் வரை மட்டுமே வெற்றி பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், தமிழக வெற்றிக் கழகம் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் படிக்க: தேர்தல் முடிவுகள்.. குழந்தைகளின் மனநிலையைக் கவனியுங்கள்.. பெற்றோர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!

Follow Us