“தமிழக அரசின் கடன் சுமை ரூ.10.71 லட்சம் கோடியாக உயர்வு”.. வெள்ளை அறிக்கை கேட்கும் சரத்குமார்!!
Tamilnadu Assembly Election: கடன் சுமையை பாதியாக குறைத்திருக்கலாம். பல மாநிலங்களுக்கு செல்லும்போது, தமிழகத்தில் ஊழல் மிகுந்த ஆட்சி நடக்கிறது என கூறுகிறார்கள். தமிழகம் என்றாலே ஊழல் என்பதை மாற்ற வேண்டும். மத்திய அரசு 11 ஆண்டுகளாக தமிழகத்திற்கு ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

சரத் குமார், தமிழிசை
Tamilnadu Polls 2026: சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் திறந்த வாகனத்தில் நின்றபடி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, மயிலாப்பூர் பகுதி கலாசாரம் அடிப்படையில் பல கலைகள் வளர்க்கப்படும் இடமாக உள்ளது. தமிழ், தமிழ் என்று சொல்பவர்கள் தமிழுக்கு பெருமை சேர்ப்பது இல்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தமிழுக்கு பெருமை சேர்த்து கொண்டிருக்கிறார். திருக்குறளை 13 மொழிகளில் மொழி பெயர்க்க சொன்னவர் பிரதமர் மோடி என்பதை மறந்து விடக்கூடாது.
இதையும் படிக்க: குஷியில் மாணவர்கள்.. பள்ளிகளுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி விடுமுறை..
தமிழகத்தின் கடன் உயர்வு:
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகத்தின் கடன் ரூ.5 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது, ரூ.10.71 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் கூடுதலாக வாங்கிய ரூ.5 லட்சம் கோடி கடன் எதற்காக செலவிடப்பட்டது என்பதற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கடன் மூலம் லாபத்தை சம்பாதித்து மக்களுக்கு கொடுக்காமல், உங்கள் குடும்ப செலவுக்கு எடுத்துவிட்டீர்களோ? என்று தோன்றுகிறது. இந்த கடனில் ஊழல் செய்யாமல் இருந்திருந்தால் மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்திருக்கலாம்.
தமிழகம் என்றாலே ஊழல்:
கடன் சுமையை பாதியாக குறைத்திருக்கலாம். பல மாநிலங்களுக்கு செல்லும்போது, தமிழகத்தில் ஊழல் மிகுந்த ஆட்சி நடக்கிறது என கூறுகிறார்கள். தமிழகம் என்றாலே ஊழல் என்பதை மாற்ற வேண்டும். மத்திய அரசு 11 ஆண்டுகளாக தமிழகத்திற்கு ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த பணம் வரவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா?
சொன்னதை செய்யவில்லை:
Thank you @realsarathkumar Avl for joining us in the Mylapore Assembly election campaign. Your presence has energized our cadre.#தமிழிசை4மயிலாப்பூர் #tamilisai4mylai #NDAForTN pic.twitter.com/ax7brgxJ0N
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) April 13, 2026
இந்த ஆட்சியில் போதை கலாசாரம், குடிப்பழக்கம் அதிகரித்துள்ளது. திமுக சொன்னதையும் செய்யவில்லை. கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. சொன்னதை செய்கிற ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்றால், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும். எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் மத்திய, மாநில அரசின் உறவு சிறப்பாக இருக்கும் இவ்வாறு அவர் பேசினார்.
மக்களுக்கு பிரச்சினை தீராது:
முன்னதாக, சரத்குமார் நிருபர்களிடம் கூறும்போது, “தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ‘ஜனநாயகன்’ திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியாகிறது என்றால் அதனை திரைப்படத்தின் தயாரிப்பாளரிடம் தான் கேட்க வேண்டும். இந்த திரைப்படம் இணையத்தில் வெளியானதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் காரணம் என்ற குற்றச்சாட்டு அபத்தமானது.
இதையும் படிக்க : தமிழகம் வர மறுக்கும் ராகுல் காந்தி… பிரசாரத்தை புறக்கணிக்க முடிவு? இண்டி கூட்டணியில் வெடிக்கும் யுத்தம்!
நான் நடித்த ‘ஜக்குபாய்’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான போது, திமுக ஆட்சியில் இருந்தது. அப்போது நான் திமுகவை குற்றம் சாட்டவில்லை. ‘ஜனநாயகன்’ திரைப்படத்தால் மக்களுக்கான எந்த பிரச்சினைகளும் தீராது” என்றார்.