AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – வேட்பாளர்களை அறிவித்த சசிகலா

புதிதாக அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள சசிகலா புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதன்படி நெட்டப்பாக்கம் தொகுதியில் சிலம்பரசன், வில்லியனூர் தொகுதியில் நந்தகோபால், உழவர்கரை  தொகுதியில் லாவண்யா, இந்திரா நகர்  தொகுதியில் ஜெயபால் ஆகியோர் போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ளார். 

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – வேட்பாளர்களை அறிவித்த சசிகலா
சசிகலா
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 22 Mar 2026 22:39 PM IST

புதிதாக அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள சசிகலா புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதன்படி நெட்டப்பாக்கம் தொகுதியில் சிலம்பரசன், வில்லியனூர் தொகுதியில் நந்தகோபால், உழவர்கரை  தொகுதியில் லாவண்யா, இந்திரா நகர்  தொகுதியில் ஜெயபால் ஆகியோர் போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ளார்.  ராமதாஸின் பாமகவுடன் கூட்டணி அமைத்துள்ள அவர் தற்போது 4 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மீதமுள்ள தொகுதிகளில் ராமதாஸின் பாமக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதுச்சேரியில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த சசிகலா

புதிதாக அனைத்து இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கிய சசிகலா சட்டமன்ற தேர்தலில் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் தனது கட்சி கொடியையும் அறிவித்தார். அதுவரை திமுக கூட்டணி, பாஜக – அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என 4 முனைப்போட்டியாக இருந்த தமிழக தேர்தல் களம், சசிகலா கட்சி தொடங்கியுள்ள நிலையில் 5 முனை போட்டியாக மாறியுள்ளது.

இதையும் படிக்க : திமுகவின் கோட்டையாக இருக்கும் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி.. 2026 தேர்தலில் வெற்றியை தக்க வைத்துக்கொள்ளுமா?

இந்த நிலையில்  தற்போது உழவர்கரை, வில்லியனூர், நெட்டப்பாக்கம், இந்திரா நகர் ஆகிய 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மேலும் பிற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ள நிலையில் யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் ராமதாஸின் பாமக சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலாவுடன் கூட்டணி குறித்து பேசிய ராமதாஸ்

 

இதையும் படிக்க : பரிசுப் பொருட்கள் விநியோகம்? ஆர்.பி.உதயகுமார் இல்லத்தில் பறக்கும் படை சோதனை – மதுரையில் பரபரப்பு

சசிகலாவுடன் கூட்டணி குறித்து பேசிய ராமதாஸ்,  அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்ததன் மூலம் தமிழக அரசியலில் பெரிய தாக்கம் ஏற்படும். இந்த கூட்டணி அரசியல் கட்சிகளிடையே அதிர்வலை உருவாக்கியுள்ளது. இன்னும் சிலர் நாளை இந்த கூட்டணியில் இணைய உள்ளனர். 234 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிட உள்ளோம். சசிகலாவுடன் இணைந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்போம். எங்களுடன் இணைய விரும்புபவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவே இந்த கூட்டணியை அமைத்துள்ளோம் என்று பேசினார்.

Follow Us