பரிசுப் பொருட்கள் விநியோகம்? ஆர்.பி.உதயகுமார் இல்லத்தில் பறக்கும் படை சோதனை – மதுரையில் பரபரப்பு
R.B.Udhayakumar house raid: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதாக கிடைத்த தகவலின் பெயரில் அவரது வீட்டில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மதுரை, மார்ச் 22 : சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50, 000க்கும் மேல் எடுத்து செல்லும் பணம் மற்றும் நகைகள் எடுத்து செல்லப்படுகின்றன. மேலும் அரசியல் கட்சி சின்னங்களுடன் வழங்கப்படும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் மார்ச் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தீவிர சோதனை
தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து மார்ச் 15, 2026 அன்று முதல் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக, தேர்தல் பறக்கும் படைகள் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரூ.50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணம், நகை மற்றும் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க : “வாக்காளர் அட்டையில் எழுத்துப் பிழை உள்ளதா?”.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..




மேலும், அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பரிசாகவோ அல்லது பணமாகவோ தெரிந்தால் தகவல் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அப்படி தகவல் கிடைத்தால் உடனடியாக அந்த இடங்களில் சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்வது வருகிறது. திருச்சியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு தவெகவினர் வழங்கிய வாட்டர் பாட்டில்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூர் என்ற பகுதியில், ஜெயலலிதா கோவில் வளாகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது கட்சியினரை திரட்டி அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தியதாகவும், வாக்காளர்களுக்கு வழங்க பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் குவித்து வைத்திருப்பதாகவும் திமுகவினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதையும் படிக்க : “டாப் கியரில் நாதக”.. முதல்கட்ட தேர்தல் சுற்றுப்பயணம்.. நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார் சீமான்..
இந்த புகாரின் அடிப்படையில், தேர்தல் பறக்கும் படையினர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் மார்ச் 22, 2026 அன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். ஆனால், அந்த சோதனையில் எந்தவித பரிசு பொருட்களும், பணமும் கைப்பற்றவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், பறக்கும் படையினரின் கண்காணிப்பு மேலும் கடுமையாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.