AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“வாக்காளர் அட்டையில் எழுத்துப் பிழை உள்ளதா?”.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

Tamil Nadu Assembly Election: அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வரும்போது வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்படுத்த வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும். அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தைக் காட்ட ஆதார் உள்ளிட்ட 12 அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 22 Mar 2026 16:45 PM IST
Tamil Nadu Polls 2026: வாக்களிக்கும்போது காட்டப்படும் வாக்காளர் அடையாள அட்டையில் எழுத்துப் பிழைகள் இருந்தாலும் பொருட்படுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்காளர்கள் தங்களின் உரிமையை மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும். அதில் ஆள்மாறாட்டம் செய்யப்படுவதைத் தடுப்பதற்காக, வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் தங்களுடைய அடையாளத்தை மெய்ப்பிக்க வேண்டும்.

1 / 5
இதற்கு ஒரு வழி, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையைக் காட்டுவதுதான். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையைக் காட்ட முடியாமல் போய்விட்டால், அவர்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்படக்கூடும். எனவே அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டு, பட்டியலில் பதிவு செய்யப்பட்ட 100 சதவீத வாக்காளர்களுக்கும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

2 / 5
அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வரும்போது வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்படுத்துவதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனாலும் அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தைக் காட்டுவதற்காக ஆதார் உள்ளிட்ட 12 அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

3 / 5
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையினால் வாக்காளரின் அடையாளம் மெய்ப்பிக்கப்படும்போது, அதிலுள்ள அச்சுப்பிழைகள் அல்லது எழுத்துப் பிழைகள் போன்றவற்றை பொருட்படுத்தத் தேவையில்லை. மற்றொரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடியில் கொடுக்கலாம்.

4 / 5
ஆனால் அந்த வாக்காளர் வாக்களிப்பதற்காக அந்தச் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். அப்போது அவரது வாக்காளர் அடையாள அட்டை ஏற்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும். புகைப்படம் பொருந்தாததால் வாக்காளரின் அடையாளத்தை மெய்ப்பிக்க இயலாமல் போனால், 12 மாற்று புகைப்பட ஆவணங்களில் ஏதாவது ஒன்றை அளிக்க வேண்டும்.

5 / 5
Follow Us