AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Madurai Central Constituency Election 2026: திமுகவின் கோட்டையாக இருக்கும் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி.. 2026 தேர்தலில் வெற்றியை தக்க வைத்துக்கொள்ளுமா?

Tamil Nadu Elections 2026: 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சுமார் 73,025 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் 39,029 வாக்குகள் பெற்றார். மூன்றாவது இடத்தில் மக்கள் நீதி மையமும், நான்காவது இடத்தில் நாம் தமிழர் கட்சியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Madurai Central Constituency Election 2026: திமுகவின் கோட்டையாக இருக்கும் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி.. 2026 தேர்தலில் வெற்றியை தக்க வைத்துக்கொள்ளுமா?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 22 Mar 2026 21:06 PM IST

மார்ச் 22, 2026: 2026 சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கவனம் பெற்ற முக்கிய தொகுதிகளில் ஒன்றாக மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி பார்க்கப்படுகிறது. மதுரை மத்திய தொகுதி, மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான தொகுதியாகும். இது மதுரை மக்களவைத் தொகுதிக்குக் கீழ் வரக்கூடிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். மதுரை நகரின் மையப்பகுதிகள், முக்கிய வணிக வளாகங்கள், பழமையான குடியிருப்பு பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள நகர்ப்புற பகுதிகள் இந்தத் தொகுதியில் அடங்குகின்றன.

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி:

இந்தத் தொகுதியை எடுத்துக் கொண்டால், சுமார் 2½ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வணிகர்கள், சிறு தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வருமான மக்கள் அதிகமாக உள்ள பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சுமார் 73,025 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் 39,029 வாக்குகள் பெற்றார். மூன்றாவது இடத்தில் மக்கள் நீதி மையமும், நான்காவது இடத்தில் நாம் தமிழர் கட்சியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொகுதியை பொருத்தவரையில், திமுகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 1977ஆம் ஆண்டிலிருந்து இதுவரை திமுக பல முறை வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக 2011, 2016 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய பிரச்சனைகள் என்ன?

மதுரை மத்திய தொகுதியில் மக்கள் முன்வைக்கும் முக்கிய பிரச்சனைகள் பல உள்ளன. குறிப்பாக, கடும் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. தற்போது சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: அதிமுக vs திமுக.. மதுரை தெற்கு தொகுதி யாருக்கு சாதகம்?

அதேபோல், குடிநீர் தட்டுப்பாடும் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு கோடைக்காலத்திலும் குடிநீர் வசதி போதுமான அளவில் இல்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

இவை இருந்தாலும், மதுரை நகரின் முக்கிய வணிக மையமாக இந்தத் தொகுதி திகழ்கிறது. கல்வி மற்றும் மருத்துவ வசதிகளும் அதிகமாக உள்ளன.

திமுகவின் கோட்டை.. ஹேட்ரிக் வெற்றி கிடைக்குமா?

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்தத் தொகுதி திமுகவிற்கு சாதகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் துர்கா குமாரசுவாமி வேட்பாளராக களமிறங்குகிறார். அதிமுக, திமுக, தமிழக வெற்றி கழகம், சசிகலா–ராமதாஸ் கூட்டணி ஆகியவை இன்னும் தங்களது வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், திமுக தரப்பில் மீண்டும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Follow Us