Madurai South Constituency Election 2026: அதிமுக vs திமுக.. மதுரை தெற்கு தொகுதி யாருக்கு சாதகம்?
Tamil Nadu Elections 2026: 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இந்த மதுரை தெற்கு தொகுதியில் மதிமுக வேட்பாளர் பூமிநாதன் 62,812 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் எஸ். எஸ். சரவணன் 56,297 வாக்குகள் பெற்றார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 22, 2026: அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முக்கிய தொகுதியாக பார்க்கப்படுவது மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி, மதுரை மக்களவைத் தொகுதிக்குக் கீழ் வரக்கூடிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். மதுரை நகரின் தெற்கு பகுதிகள், குடியிருப்பு மற்றும் வணிக மையங்கள், புறநகர் பகுதிகள் ஆகியவை இந்தத் தொகுதியில் அடங்குகின்றன.
மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி:
2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இந்த மதுரை தெற்கு தொகுதியில் மதிமுக வேட்பாளர் பூமிநாதன் 62,812 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் எஸ். எஸ். சரவணன் 56,297 வாக்குகள் பெற்றார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தவெக வேட்பாளர் தேர்வு தீவிரம்.. நாளை பனையூர் அலுவலகத்திற்கு வர 115 பேருக்கு விஜய் அழைப்பு..
இந்தத் தொகுதியை எடுத்துக் கொண்டால், அதிமுக மற்றும் திமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இரு கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சுமார் 50 சதவீதம் எனக் கணிக்கப்படுகிறது.
இந்தத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் சுமார் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை உள்ளனர். நகர்ப்புற வாக்காளர்கள், நடுத்தர மற்றும் கீழ்மட்ட வருமான மக்களே அதிகமாக உள்ளனர்.
இந்த தொகுதியின் முக்கிய பிரச்சனைகள் என்ன?
மதுரை தெற்கு தொகுதி முக்கியமானதாக இருந்தாலும், இங்கு பல பிரச்சனைகள் மக்கள் தரப்பில் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் அதிகம், சாலை மேம்பாடு குறைவு, குடிநீர் தட்டுப்பாடு, கழிவுநீர் மற்றும் குப்பை மேலாண்மை பிரச்சனைகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
மேலும் படிக்க: “வேல்முருகன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவார்”.. திமுக கொடுத்த விளக்கம்!!
களம் யாருக்கு சாதகம்:
இருப்பினும், வணிகம் மற்றும் கல்வி சார்ந்த வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யாதேவி என்ற வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். பல கட்சிகள் போட்டியிட்டாலும், இந்தத் தொகுதியை பொருத்தவரையில் முக்கிய போட்டி அதிமுக மற்றும் திமுக இடையே மட்டுமே நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.