தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது ஜனநாயகத்துகு பெரிய சேதமாகும்.. மநீம தலைவர் கமல்ஹாசன்!
Makkal Needhi Maiam Kamal Haasan: தமிழக வெற்றிக் கழகத்தை ஆளுநர் அர்லேகர் ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது ஜனநாயகத்தின் மீது ஏற்படும் மிகப்பெரிய சேதம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டை முன் வைத்தார். இது தொடர்பாக அவர் கூறியது
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதில், 1.70 கோடிக்கும் அதிமான வாக்குகளுடன் 34.8 சதவீத வாக்கு வங்கியை முதல் தேர்தலிலேயே பெற்றது. இதனால், பெரும்பான்மை உள்ள முதல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் கடிதம் மூலமாகவும், நேரில் சந்தித்தும் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில், 2- ஆவது நாளாக ஆளுநர் அர்லேகரை சந்தித்து தவெக தலைவர் விஜய் வலியுறுத்திய நிலையில், தற்போதும், ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களை உறுப்பினருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
சுதந்திரமாக ஆட்சி அமைக்கும் உரிமையில்லை
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் சுதந்திரமாக ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை மக்கள் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத ஒன்றாகும். இதனிடையே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலின் நாங்கள் மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம். நாங்கள் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்று அறிவித்துள்ளார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன். தற்போது, அரசியலமைப்பு பதவிகளில் இருப்பவர்கள் இப்போது அதே கடமையை நிறைவேற்ற வேண்டும்.




மேலும் படிக்க: தமிழக முதல்வராக திருமாவளவன் வர வேண்டும்.. இது காலத்தின் கட்டாயம்.. சிந்தனைச் செல்வன்!
தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது அவமதிப்பாகும்
இது ஒரு கோரிக்கை அல்ல, மாறாக அவர்களின் அரசியலமைப்பு கடமையை நினைவூட்டுவதாகும். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்றுள்ளது. அவரை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது, தமிழ்நாடு மக்களின் ஆணையை அவமதிப்பதற்கு சமமாகும். சட்டமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 233 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் உள்ளனர். இது மாநிலத்திற்கே ஒரு அவமானம் ஆகும்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.
என் சகோதரர் திரு. @mkstalin அவர்கள் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று…
— Kamal Haasan (@ikamalhaasan) May 7, 2026
ஜனநாயகத்தின் மீது ஏற்படும் மிகப்பெரிய சேதமாகும்
இது ஜனநாயகத்திற்கு ஏற்படும் மிகப்பெரிய சேதம் ஆகும். எஸ்.ஆர். பொம்மை வழக்கில், பெரும்பான்மை சட்டமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும், ராஜ்பவனில் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. நான் பேசுவது கட்சி அரசியல் அல்ல. இது ஒரு இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல். தமிழக மக்களின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்க வேண்டும்… தொல்.திருமாவளவன்!