AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவுக்கு அவகசாம் வழங்கிய ஆளுநர் – எப்போ வரை தெரியுமா?

TVK Vijay : தமிழகத்தில் யாருக்கும் பெரும்பாண்மை கிடைக்காத நிலையில்  தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் மே 8, 2026 வெள்ளிக்கிழமை வரை அவகாசம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து தவெகவின் பதவியேற்பு விழா திட்டமிட்டபடி நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவுக்கு அவகசாம் வழங்கிய ஆளுநர் – எப்போ வரை தெரியுமா?
விஜய் - கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 06 May 2026 22:38 PM IST

சென்னை, மே 4 : தமிழகத்தில் யாருக்கும் பெரும்பாண்மை கிடைக்காத நிலையில்  தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் மே 8, 2026 வெள்ளிக்கிழமை வரை அவகாசம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் ஒருவேளை தவெக பெரும்பாண்மையை நிரூபிக்க தவறினால்  சட்டமன்றத்தை 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கும் நடவடிக்கையை ஆளுநர் பரிசீலிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெகவுக்கு அவகசாம் வழங்கிய ஆளுநர்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த மே 4,  2026 அன்று வெளியான நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. குறிப்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் திமுகவுக்கு ஆதரவாக இருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. காரணம் தவெகவின் பெரும்பாலான தொகுதி வேட்பாளர்கள் புதுமுகங்கள் என்ற நிலையில் அத்தனை கருத்து கணிப்புகளையும் அடித்து நொறுக்கி தவெக பெரும் வெற்றி பெற்றது.

இதையும் படிக்க : விஜய்யின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் ராகுல் காந்தி? வெளியான தகவல்

இந்த நிலையில் ஆட்சியமைக்க அந்த கட்சிக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில் தவெக பெற்ற 108 தொகுதிகளில் 1 தொகுதியில் விஜய் ராஜினமா செய்தாக வேண்டும். இந்த நிலையில் 13 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தவெகவிற்கு முழு ஆதரவு வழங்கியது. அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேரின் ஆதரவு தவெகவிற்கு கிடைக்கும்.

மீதமுள்ள கட்டிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக பாமக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு கோரி கடிதம் எழுதியுள்ளது. இந்த நிலையில் அதிமுகவுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படும் நிலையில் அதனை 2 கட்சிகளும் மறுத்துள்ளன. மேலும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தவெகவுக்கு ஆதரவு இல்லை என வெளிப்படையாக அறிவித்தார்.

இதையும் படிக்க : தவெக அமைச்சரவையில் யாருக்கு வாய்ப்பு ? வெளியான தகவல்

இதற்கிடையில் தவெக தலைவர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார். இந்த நிலையில் 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை அவர் வழங்கவில்லை என கூறி ஆளுநர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மே 7, 2026 அன்று நடைபெறவிருந்த பதவியேற்பு விழா திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு அந்த கட்சியினரிடையே எழுந்துள்ளது. இதற்கிடையில் அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜூனா ஆளுநரை சந்தித்து மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தான் ஆளுநர் தவெக பெரும்பான்மையை நிரூபிக்க மே 8, 2026 வெள்ளிக்கிழமை வரை அவகாசம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us