AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிருப்தியில் ஆளுநர்? விஜய் பதவியேற்பதில் சிக்கல்? வெளியான பரபரப்பு தகவல்

ஆட்சி அமைக்க உரிமை கோரி விஜய் அளித்த கோரிக்கையில் ஆளுநர் அர்லேக்கர் திருப்தி இல்லை என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.  தற்போது  118 பேரின் ஆதரவு இருப்பதாக விஜய் வாய் மொழியாக மட்டுமே கூறியதாகவும், அவர்களின் ஆதரவு கடிதத்தை விஜய் அளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதிருப்தியில் ஆளுநர்? விஜய் பதவியேற்பதில் சிக்கல்? வெளியான பரபரப்பு தகவல்
ஆளுநருடன் தவெக தலைவர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 06 May 2026 18:40 PM IST

சென்னை, மே 6 : ஆட்சி அமைக்க உரிமை கோரி விஜய் அளித்த கோரிக்கையில் ஆளுநர் அர்லேக்கர் திருப்தி இல்லை என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.  தற்போது  118 பேரின் ஆதரவு இருப்பதாக விஜய் வாய் மொழியாக மட்டுமே கூறியதாகவும், அவர்களின் ஆதரவு கடிதத்தை விஜய் அளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஆளுநர்  ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தனது கட்சி நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து கடிதம் வழங்கியிருந்தார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிருப்தியில் ஆளுநர்? விஜய் பதவியேற்பதில் சிக்கல்?

இதனையடுத்து விஜய்யின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பாண்மை நிரூபிக்கப்படாத நிலையில் நாளை திட்டமிட்டபடி பதவி ஏற்பு விழா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் மற்றொரு பக்கம் அதிமுக தனது கட்சி நிர்வாகிகளுடன் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : எடப்பாடியுடன் தவெக பொதுச்செயலர் ஆனந்த் சந்திப்பு? ஆதரவு அளிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை!

தமிழ்நாடு சட்டமன்றம் கலைப்பு

 

தமிழ்நாடு 16வது சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.   மேலும், ஆளுநரின் உத்தரவு மே 5, 2026  ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் அமைச்சர்கள் மே 7, 2026 நாளை பதவியேற்கவுள்ள நிலையில் விரைவில் புதிய அமைச்சரவை அமையவுள்ளது.

இதையும் படிக்க : திமுக- காங்கிரஸ் கூட்டணி முறிவு.. உள்ளாட்சி முதல் மக்களவை வரை தவெகவுடன் கூட்டணி என காங்கிரஸ் உறுதி!

. இந்த நிலையில் தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்கள் குறித்த முதற்கட்ட பட்டியல் தற்போது வைரலாகி வருகிறது. அதன் படி அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், திருப்பூர் சத்தியபாமா, விஜயலட்சுமி, அருண்ராஜ், விஜய் சரவணன், தமிழன் பார்த்திபன், முகமது பர்வேஸ், கல்லாணை ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளதால் அக்கட்சிக்கும் ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us