AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய் – பதவி ஏற்பு எப்போது?

தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோருவதற்காக தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து கடிதம் வழங்கினார். இதனையடுத்து விஜய்யின் பதவியேற்பு விழா சென்னை நேரு ஸ்டேடியம் உள் விளையாட்டு அரங்கில் மே 7, 2026 அன்று நடைபெறவிருக்கிறது. இதனையடுத்து அங்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய் – பதவி ஏற்பு எப்போது?
தவெக நிர்வாகிகளுடன் ஆளுநரை சந்தித்த விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 06 May 2026 16:13 PM IST

சென்னை, மே 6 : தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோருவதற்காக தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து கடிதம் வழங்கினார். இதனையடுத்து விஜய்யின் பதவியேற்பு விழா சென்னை நேரு ஸ்டேடியம் உள் விளையாட்டு அரங்கில் மே 7, 2026 அன்று நடைபெறவிருக்கிறது. இதனையடுத்து அங்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  இதற்கிடையில் தவெக நிர்வாகிகள் ஆட்சியமைப்பதற்கான பெரும்பாண்மையை நிரூபிக்க கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தற்போது வரை காங்கிரஸ் கட்சி தங்களது முழு ஆதரவை தவெகவிற்கு வழங்கியுள்ளது.

மேலும் ஆட்சியமைக்க குறைந்தது 118 இடங்கள் தேவை என்ற நிலையில், பாமக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் தவெக தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. அதிமுகவின் ஆதரவை கோருவதற்காக  தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த தகவலை தவெக தரப்பில் மறுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன் – தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன இயக்குநர் சேரன்

ஆளுநரை சந்தித்த விஜய்

 

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் மே 6, 2026 அன்று சென்னை நேரு ஸ்டேடியம் உள் விளையாட்டு அரங்கில் காலை 11.30 மணிக்கு பதவி  ஏற்கவுள்ளதாகவும் அவருடன் தவெக எம்எல்ஏகளும் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதற்கான ஏற்பாடுகள் நேரு உள் விளையாட்டு அரங்கில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பதவி ஏற்பு விழாவுக்காக தவெக எம்எல்ஏகள் தற்போது மாமல்லபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க :  எடப்பாடியுடன் தவெக பொதுச்செயலர் ஆனந்த் சந்திப்பு? ஆதரவு அளிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 5 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தவெகவிற்கு முழு ஆதரவை வழங்கியுள்ளது. இருப்பினும் தங்களுக்கு ஒரு அமைச்சர் பதவி வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. அதற்கு தவெக ஒப்புதல் வழங்கினால் தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் நுழையும் என கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் பாமக தரப்பில் சௌமியா அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஒருவேளை அதிமுகவின் ஆதரவு கிடைத்தால் தவெக ஆட்சியமைக்க அருதி பெரும்பாண்மை கிடைக்கும் என கூறப்படுகிறது.

 

 

Follow Us