AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக அமைச்சரவையில் யாருக்கு வாய்ப்பு ? வெளியான தகவல்

TVK Vijay: தவெக தலைவர் விஜய் மே 7, 2026 அன்று முதல்வராக பதவியேற்கும் நிலையில் அவருடன் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர்களாக பொறுப்பேற்கவிருக்கின்றனர். இந்த நிலையில் தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்கள் குறித்த முதற்கட்ட பட்டியல் தற்போது வைரலாகி வருகிறது.

தவெக அமைச்சரவையில் யாருக்கு வாய்ப்பு ? வெளியான தகவல்
தவெக நிர்வாகிகளுடன் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 06 May 2026 17:02 PM IST

சென்னை, மே 6 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்  மே 6,  2026 அன்று காலை 11.30 மணியளவில்  சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வராக பதவியேற்கவிருக்கிறார்.  அவருடன் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர்களாக பொறுப்பேற்கவிருக்கின்றனர். இந்த நிலையில் தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்கள் குறித்த முதற்கட்ட பட்டியல் தற்போது வைரலாகி வருகிறது. அதன் படி அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், திருப்பூர் சத்தியபாமா, விஜயலட்சுமி, அருண்ராஜ், விஜய் சரவணன், தமிழன் பார்த்திபன், முகமது பர்வேஸ், கல்லாணை ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக அமைச்சரவை

புதிய அமைச்சரவை குறித்து சென்னை பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் மே 5, 2026 விஜய் ஆலோசனை நடத்தி இருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு அமைச்சர் பதவி வழங்கவிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது பெரும்பாண்மையை நிரூபிக்க மற்ற கட்சியினருடன் பேச்சுவார்த்தியில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது விஜய்யின் பதவியேற்பு விழாவுக்காக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.  இதற்காக தற்போது தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் ஆட்சியமைக்க ஆதரவுகோரி பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தவெக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆளுநரை சந்தித்து விஜய் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் கடிதம் அளித்துள்ளனர். தற்போது தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ள நிலையில் விஜய்யின் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சட்டமன்ற தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில் ராகுல் காந்தி மற்றும் மு.க.ஸ்டாலின் இணைந்து பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தி பங்கேற்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பாமக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சியமைக்க 118 இடங்கள் வேண்டும் என்ற நிலையில் தற்போது அதற்கான முன்னேற்பாடுகளை தவெக செய்து வருகிறது.

விஜய்யின் முதல் கையெழுத்து?

விஜய் முதல்வராக பொறுப்பேற்றதும் விஜய் இரண்டு முக்கிய திட்டங்களில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதன் படி அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் ‘வெற்றிப்பயணம்’ திட்டத்திலும், தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் ஆகிய 2 திட்டங்களில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us