AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெகவுக்கு ஆதரவு இல்லை, காரணம் இதுதான் – அதிமுகவின் கே.பி.முனுசாமி பரபரப்பு கருத்து

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்துக்கு பின் பேசிய அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி,  தவெகவுக்கு அதிமுக ஆதரவு என்ற செய்தி தவறானது. தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசவில்லை அதிமுக மிகப்பெரிய இயக்கம். எந்த சூழலிலும் தவெகவை ஆதரிக்காது என்று தெரிவித்தார். 

தவெகவுக்கு ஆதரவு இல்லை, காரணம் இதுதான் – அதிமுகவின் கே.பி.முனுசாமி பரபரப்பு கருத்து
விஜய் - கே.பி.முனுசாமி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 06 May 2026 21:36 PM IST

சென்னை, மே 6 : அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்துக்கு பின் பேசிய அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி,  தவெகவுக்கு அதிமுக ஆதரவு என்ற செய்தி தவறானது. தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசவில்லை அதிமுக மிகப்பெரிய இயக்கம். எந்த சூழலிலும் தவெகவை ஆதரிக்காது என்று தெரிவித்தார்.  முன்னதாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை  ஆதரவு அளிப்பது குறித்து பேசியதாக தகவல் வெளியாகியிருந்தது.

அதிமுகவின் கே.பி.முனுசாமி பரபரப்பு கருத்து

 

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இந்திய அளவில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. காரணம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் திமுகவுக்கு ஆதரவாக இருந்த நிலையில், இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கிய தவெக 108 தொகுதிகளில் வென்று அனைத்த கருப்புகளையும் பொய்யாக்கியது. இந்த நிலையில் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் தற்போது காங்கிரஸ் தவெகவிற்கு முழு ஆதரவு அளித்துள்ளது. அந்த கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ள நிலையில் தற்போது ஆதரவ கேட்டு மற்ற கட்சிகளுக்கு தவெக கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : தவெக அமைச்சரவையில் யாருக்கு வாய்ப்பு ? வெளியான தகவல்

இதன் ஒரு பகுதியாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு கோரியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அதனை தவெக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அதிமுக நிர்வாகிகள் சிலர் தவெகவுடன் கூட்டணி வைக்க கோரி அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக தவெகவை ஆதரிக்க வலியுறுத்தி சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக கூறப்படுகிறது.  மேலும், சி.வி.சண்முகத்தை சில எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்த சந்திப்பு நடக்கிறதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கே.பி.முனுசாமி தவெகவுக்கு ஆதரவு இல்லை என மறுத்துள்ளார்.

இதையும் படிக்க : எடப்பாடியுடன் தவெக பொதுச்செயலர் ஆனந்த் சந்திப்பு? ஆதரவு அளிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை!

தவெகவுக்கு ஏற்கனவே காங்கிரஸ் முழு ஆதரவு அளித்துள்ளது. அதே நேரம் அதிமுக பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த நிலையில் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற வேண்டும். இந்த நிலையில் அது சாத்தியமில்லை என கூறப்படுகிறது.

 

 

Follow Us