AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு? முதல்வராகிறாரா விஜய்?

Vijay Meets Governor Vishwanath Arlekar: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு தமிழக பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரை கட்சியின் தலைவர் விஜய் இன்று 2- ஆவது நாளாக சந்தித்தார். இது குறித்த முழு விவரம் இந்தப்பதிவில்.

தவெக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு? முதல்வராகிறாரா விஜய்?
தமிழக ஆளுநரை 2- ஆவது நாளாக தவெக தலைவர் விஜய் சந்திப்பு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 07 May 2026 12:27 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், காங்கிரஸ் ஆதரவுடன் சேர்த்து 113 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரி தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேற்று புதன்கிழமை விஜய் சந்தித்து கடிதம் அளித்தார். அப்போது, பெரும்பான்மையே நிரூபிப்பதற்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கிய நிலையில், ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுக்காத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று வியாழக்கிழமை ( மே 7- ஆம் தேதி) மீண்டும் தமிழக பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரை சந்தித்துள்ளார். இதில், தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு விஜய் வலியுறுத்த இருப்பதாக முதலில் கூறப்படுகிறது.

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு

பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தமிழக வெற்றிக் கழகம் பதவி ஏற்றதும் சட்டமன்றத்தில் விரைவில் பெரும்பான்மையே நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று வியாழக்கிழமை ( மே 7- ஆம் தேதி) தமிழக வெற்றி கழக தலைவர் முதல்வராக பதவியேற்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: தமிழக முதல்வராக திருமாவளவன் வர வேண்டும்.. இது காலத்தின் கட்டாயம்.. சிந்தனைச் செல்வன்!

விஜய்யிடம் ஆளுநர் எழுப்பிய கேள்விகள்

இதனிடையே, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யிடம் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநர் அர்லேகர் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு, தவெக தலைவர் விஜய் பதில் அளித்துள்ளார். அவை என்ன மாதிரியான கேள்விகள் என்பதை பார்க்கலாம்.

  • 113 எம். எல். ஏ-க்களை வைத்து எப்படி ஆட்சி அமைப்பீர்கள்.
  • தமிழக வெற்றிக் கழக அரசை வேறு எந்த கட்சி ஆதரிக்கும்.
  • 113 எம். எல். ஏ-க்களை வைத்து நிலையான அரசு அமைக்க முடியுமா.
  • பதவி ஏற்ற பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என எப்படி நம்புகிறீர்கள்.
  • பெரும்பான்மை கிடைத்து விடும் எனும் யூகத்தின் அடிப்படையில் செயல்பட முடியுமா.

45 நிமிடங்கள் நடந்த ஆளுநர் – விஜய் சந்திப்பு

என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத அர்லேகர் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு தவெக தலைவர் விஜய் பதில் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், தவெக ஆட்சி அமைப்பதற்குக ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பிறகு பனையூரில் நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு விஜய் புறப்பட்டு சென்றார்.

மேலும் படிக்க: பனையூரில் அவசர ஆலோசனை கூட்டம்.. தவெக எம்.எல்.ஏகளுக்கு உடனடி அழைப்பு..

Follow Us