AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரூ.100 கோடி சொத்துகளை மறைத்த விஜய்? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

TVK Vijay : வேட்புமனுவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது சொத்து விவரங்களை மறைத்ததாக பெரம்பூர் வாக்காளர் விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் வருமானத்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.100 கோடி சொத்துகளை மறைத்த விஜய்? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 20 Apr 2026 18:47 PM IST

சென்னை, ஏப்ரல்  20 : வேட்புமனுவில் தவெக தலைவர் விஜய் சொத்து விவரங்களை மறைத்ததாக பெரம்பூர் வாக்காளர் விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  அதில், தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது.  பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில் ரூ.115.13 கொடி சொத்து உள்ளதாகவும், திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுவில் ரூ.220.15 கோடி சொத்து இருப்பதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளார் . இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.  இந்த நிலையில்  வேட்புமனுவில் சொத்து கணக்கை மறைத்தது தொடர்பாக வருமானவரித் துறை பதில்தர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.100 கோடி சொத்துகளை மறைத்த விஜய்?

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் 2 தொகுதிகளிலும் அவர் வழங்கிய சொத்து விவரங்களில் முரண்பாடு இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவில், விஜய் தனது சொத்து மதிப்பை ரூ.115.13 கோடி என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.220.15 கோடி என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் 2 வேட்புமனுக்களிலும் சுமார் ரூ.100 கோடி வரை வித்தியாசம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் ரூ.13 லட்சம் பறிமுதல் – பணத்தை பறித்த சென்ற கும்பலால் பரபரப்பு

இதனையடுத்து பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் விக்னேஷ் என்பவர் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதில் 2 தொகுதிகளிலும் விஜய் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பில் வித்தியாசம் உள்ளதால் இது குறித்து விசாரிக்க வேண்டும் என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பாஜக – ஆர்எஸ்எஸ்-க்கு அதிமுகவினர் அடிபணிந்துள்ளனர்… ராகுல் காந்தி விமர்சனம்!

உயர்நீதிமன்றம் கருத்து

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஜே. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர், ஒரு மனுவில் சொத்தை குறைத்து காட்டுவது முறைகேடு என்று கருத்து தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக வருமான வரித்துறைக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Follow Us