AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் ரூ.13 லட்சம் பறிமுதல் – பணத்தை பறித்த சென்ற கும்பலால் பரபரப்பு

காரைக்குடியில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் ரூ. 13 லட்சம் பறிமுதல் செய்த நிலையில், அதனை அவர்களிடம் இருந்து மர்ம கும்பல் வழிப்பறி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் ரூ.13 லட்சம் பறிமுதல் – பணத்தை பறித்த சென்ற கும்பலால் பரபரப்பு
கார்த்தி சிதம்பரம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 20 Apr 2026 14:56 PM IST

காரைக்குடி, ஏப்ரல் 20 : காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் வைத்து பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதன் பெயரில் தேர்தல் பறக்கும் படையினர் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தினர். இந்த நிலையில் அங்கிருந்து ரூ. 13 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து பறிமுதல் பணத்தை எடுத்துக்கொண்டு தேர்தல் பறக்கும் படையினர் கருவூலத்துக்கு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

பணத்தை பறித்த சென்ற கும்பலால் பரபரப்பு

இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை எடுத்து செல்லும் வழியில் சில மர்ம கும்பல் அவர்களிடம் இருந்து பணத்தை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர். தேர்தல் பறக்கும் படையினரிடம் இருந்து பணத்தை பறித்து சென்ற மர்ம கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் ஏப்ரல் 23,2026 அன்று தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஏப்ரல் 21, 2026 நாளையுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. ரூ.50, 000க்கும் மேல் பணம் எடுத்து செல்பவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே மீண்டும் ஒப்படைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் காரைக்குடியில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அங்கு தீவிர பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது தான் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்தப் பணத்தை காரைக்குடி கருவூலத்திற்கு தேர்தல் பறக்கும் படையினர் எடுத்து சென்றுள்ளனர். செல்லும் வழியில் தான் மர்ம கும்பல் அவர்களிடம் இருந்து பணத்தை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் பணத்தை பறித்து சென்ற மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கார்த்தி சிதம்பரத்தின் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Follow Us