AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கருணாநிதி வீட்டு சிறை விவகாரம்… அதிமுக ஆட்சியில் சட்ட ரீதியான நடவடிக்கை… எடப்பாடி பழனிசாமி உறுதி!

Edappadi K Palaniswami Campaign : தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்ட விவகாரம் உண்மையெனில், சம்பந்தப்பட்டவர்கள் மீது அதிமுக ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

கருணாநிதி வீட்டு சிறை விவகாரம்… அதிமுக ஆட்சியில் சட்ட ரீதியான நடவடிக்கை… எடப்பாடி பழனிசாமி உறுதி!
திமுக கூட்டணி கட்சிகளுக்கு விசுவாசமில்லாதவர் மு.க.ஸ்டாலின்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 07 Apr 2026 18:16 PM IST

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் ஏற்காடு தொகுதி அதிமுக வேட்பாளர் உஷா ராணியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று செவ்வாய்க்கிழமை ( ஏப்ரல் 7) பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: சேலம் மாவட்டம் அதிமுகவின் எஃக்கு கோட்டையாக விளங்கி வருகிறது திமுக கூட்டணியில் நிறைய கட்சிகள் உள்ளன ஆனால் வாக்குகள் இல்லை. அதிமுக அணிகள் கட்சிகள் குறைவாக இருந்தாலும் வாக்கு வங்கிகள் நிறைந்த கட்சியாக உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் செல்வாக்கை இழந்துவிட்டன. கூட்டணி கட்சிகளுக்கு மு க ஸ்டாலின் விசுவாசம் இல்லாமல் இருந்து வருகிறார். திமுக கூட்டணி கட்சியினர் சட்டமன்றத்தில் வாய்மூடி மௌனமாக இருந்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்கு திமுக அரசு முன்வரவில்லை. ஏனென்றால் திமுகவைச் சேர்ந்தவர்களே கஞ்சா விற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தமிழக காவல்துறை திமுக அரசின் ஏவல் துறையாக மாறிவிட்டது.

கருணாநிதி குடும்பத்துக்கு இதுவே இறுதி தேர்தல்

2026 சட்டமன்ற தேர்தலில் குடும்ப அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். கருணாநிதி குடும்பத்துக்கு இந்த தேர்தல் இறுதி தேர்தல் ஆகும். தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் 3 மாதங்களில் கஞ்சா முற்றிலுமாக ஒழிக்கப்படும். சட்டத்தின் ஆட்சி நடைபெறும். நான் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன். திமுக ஆட்சி காலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் வெகுவாக குறைக்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் அரசுக்கு வரி வருவாய் இன்றி அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தோம்.

மேலும் படிக்க: ஸ்டார் தொகுதியான பெரம்பூர் சட்டமன்ற தொகுதி… விஜய், திலகபாமா வேட்பு மனு ஏற்பு..

அதிமுக ஆட்சியில் விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி

திமுக ஆட்சியில் எந்த வறட்சியும், கொரோனா நோய் தொற்றும் வராமல் திமுக அரசு ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. திமுக ஆட்சியில் கடன் வாங்கியது மட்டுமே அவர்கள் செய்த சாதனையாகும். திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட குடிமராமத்து பணிகள் அதிமுக ஆட்சியில் மீண்டும் கொண்டுவரப்படும். 2 முறை விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்த ஒரே அரசு அதிமுக அரசு ஆகும். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

மீண்டும் அம்மா கிளினிக்குகள் தொடங்கப்படும்

கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய வணிக பயிர்களுக்கு காப்பீடு கட்டணம் 2 சதவீதமாக குறைக்கப்படும். மக்கள் மத்தியில் அம்மா கிளினிக்குகளுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதை பார்த்த திமுக அதனை மூடி உள்ளது. அதிமுக ஆட்சியில் மீண்டும் அம்மா கிளினிக்குகள் தொடங்கப்படும். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்படும். கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டது உண்மையெனில், அதில் தொடர்புடைய நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: Ayyappan P Tamil Nadu Election: திமுக – அதிமுக வேட்பாளர்களை மிஞ்சி உசிலம்பட்டி தொகுதியில் வெற்றி வாகை சூடுவாரா பி.ஐயப்பன்!

Follow Us