AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஸ்டார் தொகுதியான பெரம்பூர் சட்டமன்ற தொகுதி… விஜய், திலகபாமா வேட்பு மனு ஏற்பு..

இந்த நிலையில், இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில், விஜயின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், அதை நிராகரிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். காரணம், விஜயின் சொத்து விவரங்கள் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஸ்டார் தொகுதியான பெரம்பூர் சட்டமன்ற தொகுதி… விஜய், திலகபாமா வேட்பு மனு ஏற்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Apr 2026 15:17 PM IST

சென்னை, ஏப்ரல் 7, 2026: 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர்களும் தங்களது தொகுதிகளுக்குச் சென்று தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 7ஆம் தேதி இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலை எடுத்துக் கொண்டால், ஸ்டார் தொகுதியாக பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி பார்க்கப்படுகிறது. பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியை எடுத்துக் கொண்டால், திமுக தரப்பில் ஆர்.டி. சேகர், பாட்டாளி மக்கள் கட்சி தரப்பில் திலகபாமா, தமிழக வெற்றி கழகம் தரப்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் போட்டியிடுகின்றனர்.

மேலும் படிக்க: தவெக தலைமைக்கு அடுத்த சிக்கல்… பெரம்பூர் தொகுதியில் விஜய் பெயரில் 4 சுயேட்சை வேட்பாளர்கள்!

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி:

தமிழக வெற்றி கழகத்தைப் பொருத்தவரையில், அது தனது முதல் தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் அரசியல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். அவர் போட்டியிடும் இந்த தொகுதி மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

விஜயின் வேட்பு மனு ஏற்பு:

இந்த நிலையில், இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில், விஜயின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், அதை நிராகரிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். காரணம், விஜயின் சொத்து விவரங்கள் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், பாட்டாளி மக்கள் கட்சி தரப்பில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் திலகபாமா, இதற்கு முன்பு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் அவர் போட்டியிடுவது, அவருக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மொத்தத்தில், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி ஒரு ஸ்டார் வேட்பாளர் தொகுதியாகவே பார்க்கப்படுகிறது. இது திமுகவின் கோட்டையாக இருந்து வரும் நிலையில், வரவிருக்கும் தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெறுமா அல்லது பாட்டாளி மக்கள் கட்சி அல்லது தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறுமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow Us