“தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார்”.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!!
Tamilnadu Assembly Election: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதைவிட மோசமாக தமிழர்கள் நாகரிகமற்றவர்கள் என்றார். குடியரசு தினவிழா அணிவகுப்பில் மருது சகோதரர்கள், வேலுநாச்சியார் ஆகியோரின் உருவங்கள் கொண்ட தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு இடம் இல்லை என்று மறுத்தனர். இதனால்தான் தமிழ்நாட்டில் உங்களுக்கு இடம் இல்லை என்று எங்கள் மக்கள் சொல்கிறார்கள் என்றார்.
Tamilnadu Polls 2026: பாஜவினருக்கு தேர்தல் வந்தால்தான் தமிழ்நாடு நினைவுக்கு வரும். பட்ஜெட் தயாரிக்கும்போது மறந்துபோகும் என்று கோவையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஈரோட்டை தொடர்ந்து கோவையில் நேற்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிக்கான திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து முதல்வர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த 2021ம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வந்தபோது, கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தது. முதலமைச்சராக பொறுப்பு ஏற்ற அடுத்த மாதமே கோவை வந்த நான், பாதுகாப்பு உடை அணிந்து, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தேன். இதையெடுத்து பலமுறை கோவை வந்துள்ளேன் என்றார்.
இதையும் படிக்க: தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி? வெளியான லோக் போல் கருத்துக்கணிப்பு




தேர்தல் வந்தால் வருகிறார் மோடி:
கோவையில் “DMK Aura 10/10” 🌄👌
🌄 கோவையில் என் வாகனம் ஊர்ந்து செல்லவில்லை, மக்கள் வெள்ளத்தில் நீந்திச் சென்றது!
🌄 அன்புக்கும் பண்புக்கும் மரியாதைக்கும் உழைப்புக்கும் புதுமைக்கும் புகழ்பெற்ற கோவையில் நமது கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு இன்றைய பரப்புரைக் கூட்டம் அடித்தளம்… pic.twitter.com/nSYO32Tnl3
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 2, 2026
தேர்தல் வந்து விட்டால் அடிக்கடி தமிழகத்துக்கு பிரதமர் மோடி வந்துவிடுகிறார். நாளை (சனிக்கிழமை) கூட அவர் சென்னையில் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு வருகிறார். இதனால் திமுகவுக்குதான் மகிழ்ச்சி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சென்னைக்கு வந்து ரோடு ஷோ செய்தார். 40-க்கு 40 தொகுதிகளில் முழு வெற்றி பெற்றோம். இப்போதும் அடித்து சொல்கிறேன். அவர் வந்தால் நாம் 200 தொகுதி என்ற இலக்கை அடைவது உறுதியாகிவிடும். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் எத்தனை முறை தமிழகத்துக்கு வருகிறார்களோ அத்தனை முறை நமது வெற்றியின் அளவும் கூடிவிடும்.
தமிழ்நாட்டில் பேசுவாரா?
பீகார் மாநிலத்தில் தேர்தல் நடந்தபோது, தமிழ்நாட்டில் பீகார் மக்களை தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள் என்று ஒரு பொய்யை பேசினார். இப்போது தமிழ்நாட்டுக்கு நீங்கள் வாக்கு கேட்க வரப்போகிறீர்கள். பீகாரில் பேசிய வார்த்தையை பிரதமர் மோடி தைரியம் இருந்தால் தமிழ்நாட்டில் சொல்வாரா?. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதைவிட மோசமாக தமிழர்கள் நாகரிகமற்றவர்கள் என்றார். குடியரசு தினவிழா அணிவகுப்பில் மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், வ.உ.சி., பாரதியார் ஆகியோரின் உருவங்கள் கொண்ட தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு இடம் இல்லை என்று மறுத்தனர். இதனால்தான் தமிழ்நாட்டில் உங்களுக்கு இடம் இல்லை என்று எங்கள் மக்கள் சொல்கிறார்கள்.
இதையும் படிக்க: “நாங்கள் சங்கி என்றால், பாஜகவோடு கூட்டணி வைத்த கருணாநிதி சங்கியா?”.. முதல்வருக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி!!
தேர்தல் வந்தால்தான் நினைவுக்கு வரும்:
கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டத்தை நிராகரித்த அரசுதான் மத்திய பாஜக அரசு. ஆனால் ஆளே இல்லாத கடைக்கு டீ ஆத்துகிறது போல ஆக்ராவில் மெட்ரோ திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அது போன்று பாட்னா, போபால் ஆகிய நகரங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டை பார்த்தால் பாஜகவுக்கு எப்படி தெரிகிறது?. தேர்தல் நேரத்தில் மட்டும் அவர்களுக்கு தமிழ்நாடு நினைவுக்கு வரும். ஆனால் மத்திய பட்ஜெட் தயாரிக்கும்போது தமிழ்நாட்டை மொத்தமாக மறந்து விடுவார்கள். இப்படி எல்லாம் நீங்கள் தமிழ்நாட்டை பழிவாங்கும் காரணத்தால்தான் எங்கள் மக்களுக்கும் வாக்குச்சாவடிக்கு செல்லும்போது பாஜக நினைவு வராது. நீங்கள் என்னதான் திட்டம் போட்டு வளர்ச்சியை தடுத்தாலும், என் மக்களுக்கான திட்டங்களை நான் கொடுத்துக்கொண்டே இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்