AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திடீரென பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய விஜய்.. திருச்சியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற போது பரபரப்பு!!

Tamilnadu Assembly Election: தொடர்ந்து, திருச்சி தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு பிரச்சார வாகனத்தில் புறப்பட்ட விஜய், ரோடு ஷோவில் ஈடுபட்டார். இதனிடையே, பல்வேறு எச்சரிக்கைகளை மீறி, அவரது வாகனத்துக்கு பின்னால் பல இளைஞர்களும், சிறுவர்களும் இரு சக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது

திடீரென பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய விஜய்.. திருச்சியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற போது பரபரப்பு!!
விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 02 Apr 2026 12:55 PM IST

Tamilnadu Polls 2026: ​திருச்சி கிழக்கு தொகு​தி​யில் தவெக வேட்​பாள​ராக போட்​டி​யிட​விருக்​கும் அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய் இன்று (ஏப்​.2) திருச்​சி​யில் வேட்​புமனு தாக்​கல் செய்​து, காந்தி மார்க்​கெட் பகு​தி​யில் பிரச்​சா​ரம் மேற்​கொண்டார். இதையொட்டி, அவருக்கு காவல்​துறை சார்​பில் 51 கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளன. தவெக தலை​வர் விஜய் சென்னை பெரம்​பூர், திருச்சி கிழக்கு என 2 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறார். இதில், பெரம்​பூர் தொகு​தி​யில் கடந்த 30-ம் தேதி வேட்​புமனு தாக்​கல் செய்​தார். இதைத் தொடர்ந்​து, திருச்சி கிழக்கு தொகு​தி​யில் போட்​டி​யிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய திருச்சி சென்றார்.

இதையும் படிக்க: தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி? வெளியான லோக் போல் கருத்துக்கணிப்பு

வேட்பு மனுத் தாக்கல் செய்த விஜய்:

தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிய முதல் நாளே (மார்ச் 30) விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அன்றைய தினமே பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய இரு தொகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து வில்லிவாக்கம் மற்றும் அண்ணாநகர் தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்ய இருந்தார். ஆனால் பாதுகாப்பு கருதி பிரச்சாரத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தனர். நேற்று மற்றும் நேற்று முன் தினம் விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என்பதால் விஜய் இன்று திருச்சி கிழக்கு தொகுதியில், பாலக்​கரை பகு​தி​யில் உள்ள மாநக​ராட்சி 2-வது மண்டல அலு​வல​கத்​தில் தேர்​தல் நடத்​தும் அலு​வலர் முத்து முரு​கேச​பாண்​டி​யிடம் இன்​று(ஏப்​.2) தனது வேட்​புமனுவை தாக்​கல் செய்தார்.

ரோடு ஷோ சென்ற விஜய்:

இதற்காக, இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அவர் திருச்சி வந்தடைந்தார். தொடர்ந்து, திருச்சி தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு பிரச்சார வாகனத்தில் புறப்பட்ட விஜய், ரோடு ஷோவில் ஈடுபட்டார். இதனிடையே, பல்வேறு எச்சரிக்கைகளை மீறி, அவரது வாகனத்துக்கு பின்னால் பல இளைஞர்களும், சிறுவர்களும் இரு சக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே, காவல்​துறை சார்​பில் அக்கட்சியினருக்கு 51 கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்டிருந்தன. எனினும், அவற்றை எதையும் பின்பற்றாமல் இளைஞர்கள் செயல்பட்டனர்.

வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய விஜய்:

இதனிடையே, திருச்சி விமான நிலையத்தில் இருந்து அவர் ரோடு ஷோ சென்றபோது, அவரது வாகனத்தை பின்தொடர்ந்து வந்த தம்பதி திடீரென நிலைத் தடுமாறி கீழே விழுந்தனர். இதை பிரச்சார வாகனத்தில் இருந்து கவனித்த விஜய், உடனடியாக தனது வாகனத்தில் இருந்து கீழே இருந்து சாலைக்கு வந்தார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தை போலீசார் படை சூழ்ந்தது. தொடர்ந்து, கீழே விழுந்தவர்களிடம் நலம் விசாரித்த விஜய், பத்திரமாக செல்லும்படி அறிவுறுத்தி அவர்களை அனுப்பி வைத்தார்.

இதையும் படிக்க: “நாங்கள் சங்கி என்றால், பாஜகவோடு கூட்டணி வைத்த கருணாநிதி சங்கியா?”.. முதல்வருக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி!!

திருச்சியில் சூறாவளிப் பிரச்சாரம்:

இதைத்தொட்ரந்து, திருச்சி கிழக்கில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த விஜய், பின்னர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மதியம் 12.30 மணி முதல் மாலை 4 மணி வரை, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது என தவெக தலைமை கூறியுள்ளது.

Follow Us