தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி? வெளியான லோக் போல் கருத்துக்கணிப்பு
Lok Poll Prediction : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில் லோக் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்த கருத்து கணிப்பின் படி யாருக்கு பெருபான்மை கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
சென்னை, ஏப்ரல் 1 : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் புதிதாக களம் காணவிருக்கிறது. இதனையடுத்து பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணி, திமுக,காங்கிரஸ் கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி, ராமதாஸ் – சசிகலா கூட்டணி என 5 முனை போட்டிகள் நிலவுகின்றன. இதனால் இந்த தேர்தல் முடிவுகள் கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் லோக் போல் கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அது குறித்து பார்க்கலாம்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெல்லப்போவது யார்?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வெளியாகியுள்ள லோக் போல் (Lok Poll) கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த கருத்து கணிப்பில் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய முன்னிலை கிடைக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியான லோக் போல் கருத்துக்கணிப்பின் படி, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 181 முதல் 189 தொகுதிகள் வரை வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டணி சுமார் 40.1 சதவிகிதம் அளவிலான வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதையும் படிக்க : 4 தொகுதிகளிலும் ‘உதய சூரியன்’ சின்னத்தில் மதிமுக போட்டி.. திடீரென முடிவை மாற்றிய வைகோ!!
தவெக எத்தனை தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு?
The most wanted #TamilNadu Survey is Out!
Here’s the vote share & seat projection from our mega ground survey:
▪️DMK+ 181–189 | 40.1%
▪️ADMK+ 38–42 | 29%
▪️TVK 8–10 | 23.9%
▪️NTK 00 | 4.9%
▪️Others 00 | 2.1%Sample size:… pic.twitter.com/5CuGQMwKpP
— Lok Poll (@LokPoll) April 1, 2026
மேலும் இந்த கருத்துக்கணிப்பில் அதிமுக – பாஜக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 38 முதல் 42 தொகுதிகள் வரையும் பெறும் என்றும் அந்த கூட்டணி கிட்டத்தட்ட 29 சதவிகித வாக்குகளை பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் முதன்முறையாக களமிறங்கும் விஜய்யின் தவெக 8 முதல் 10 இடங்களில் வரை பெறும் என்றும் அந்த கட்சி 23.9 சதவிகித வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்ப்டடுள்ளது.
இதையும் படிக்க : ரூ.5 ஆயிரம் உதவித்தொகை – பயிர் கடன் தள்ளுபடி.. இன்னும் ஏராளமான வாக்குறுதிகள்.. பாமக தேர்தல் அறிக்கையில் தகவல்!
அதே நேரம் சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் பிற கட்சிகள் இந்த சட்டமன்ற தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் அந்த கட்சிகள் 5 சதவிகித வாக்குகள் வரை பெறும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 234 தொகுதிகளுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4, 2026 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த லோக் போல் கருத்துக்கணிப்பு உண்மையாகுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.