AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Thangam Thenarasu Tamil Nadu Election: 5 முறை அடுத்தடுத்து வெற்றி… 6- ஆவது முறை வெற்றியை தன்வயப்படுத்துவாரா தங்கம் தென்னரசு!

Tamil Nadu Elections 2026: திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது முதல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் அடுத்தடுத்து 5 முறை வெற்றியை பதிவு செய்த, வரும் சட்டமன்ற தேர்தலில் திருச்சுழி தொகுதியில் மீண்டும் வெற்றியை பதிவு செய்து கொள்வாரா தங்கம் தென்னரசு.

Thangam Thenarasu Tamil Nadu Election: 5 முறை அடுத்தடுத்து வெற்றி… 6- ஆவது முறை வெற்றியை தன்வயப்படுத்துவாரா தங்கம் தென்னரசு!
திருச்சுழி தொகுதியில் வெற்றியை தன்வயப்படுத்துவாரா
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 01 Apr 2026 13:50 PM IST

தமிழகத்தில் திமுக அமைச்சரவையில் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்து வருபவர் தங்கம் தென்னரசு. இவர், கடந்த 1966- ஆம் ஆண்டு ஜூன் 3- ஆம் தேதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க பாண்டியனுக்கு மகனாக பிறந்தார். அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த காரணத்தால் அரசியல் பற்றுடைய தங்கம் தென்னரசு இளமை காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இதன் காரணமாக அவருக்கு 1997- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அதில், அதிமுக வேட்பாளர் வி. எஸ். பஞ்சவர்ணத்தை வீழ்த்தி 36.50 சதவீத வாக்குகள் பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தார். அத்துடன் சட்டமன்றத்துக்குள் எம்எல்ஏவாக அடி எடுத்து வைத்தார்.

எதிர்பாராதவிதமாக தோல்வியை தழுவிய தென்னரசு

பின்னர், 2001- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்ட தங்கம் தென்னரசு அதிமுக வேட்பாளர் கே. கே. சிவசாமியிடம் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவினார். 2006 சட்டமன்றத் தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தங்கம் தென்னரசு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே. முருகனை வீழ்த்தி 44.88 சதவீத வாக்குகள் பெற்று வெற்றியை நிலை நிறுத்தினார்.

மேலும் படிக்க: மன்னார்குடியில் டி.ஆர்.பி.ராஜா மும்முறை வெற்றி.. மீண்டும் வெற்றி வசமானால் அமைச்சரவையில் இடம் உறுதி?

எம்எல்ஏ பதவியை தக்க வைத்துக் கொண்ட தங்கம்

2011 சட்டமன்ற தேர்தலில் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு மாறி போட்டியிட்ட தங்கம் தென்னரசு தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இசக்கி முத்துவை வீழ்த்தி 54.36 சதவீத வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்தார். 2016 சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் மீண்டும் களம் கண்ட தங்கம் தென்னரசு அதிமுக வேட்பாளர் கே. தினேஷ் பாபுவை வீழ்த்தி 53.61 சதவீத வாக்குகள் பெற்று வெற்றியே தனதாக்கி கொண்டார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் களம் ஆடிய தங்கம் தென்னரசு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ் ராஜசேகரை வீழ்த்தி 59.15 சதவீத வாக்குகள் பெற்று எம்எல்ஏவாக தொடர்ந்து வருகிறார்.

திருச்சுழி தொகுதியில் தடம் பதிப்பாரா தங்கம் தென்னரசு

அத்துடன், முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டு தொடர்ந்து வருகிறார். இதே போல, பள்ளிக் கல்வித்துறை, தமிழ் பண்பாட்டு துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் மீண்டும் களமிறங்க உள்ள தங்கம் தென்னரசு வெற்றியை தனதாக்கி கொள்வார் என்று அவரை சார்ந்தோர் மற்றும் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: எம்எல்ஏ பதவியில் 9 முறை… அமைச்சர் பதவியில் 6 முறை… அருப்புக்கோட்டையில் வெற்றியை பறைசாற்றுவாரா கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!

Follow Us