AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாஜகவுடன் கூட்டணி தான் வைத்தோம், அடகு வைக்கவில்லை – எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்

Stalin Responds to EPS: பாஜகவுடன் முன்னாள் முதல்வர் கருணாநிதி கூட்டணி வைத்துள்ளதால் அவரை சங்கி என அழைக்கலாமா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டணி தான் வைத்தோம் அடகு வைக்கவில்லை என்றார்.

பாஜகவுடன் கூட்டணி தான் வைத்தோம், அடகு வைக்கவில்லை – எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்
எடப்பாடி கே.பழனிசாமி - மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 01 Apr 2026 21:05 PM IST

கரூர், ஏப்ரல் 1 : தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். அந்த வகையில்அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது குறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி முழு சங்கியாக மாறிவிட்டதாக தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் முன்னாள் முதல்வர் கருணாநிதி இருக்கும் புகைப்படத்தை காட்டி, நான் சங்கி என்றால் வாஜ்பாய் உடன் இருக்கும் கருணாநிதியும் சங்கியா என்று கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு மு.க.ஸ்டாலின் பதில்

இந்த நிலையில் கரூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மு.க.ஸடாலின் இதற்கு விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தன்னை புலனாய்வு புலி என நினைத்துக்கொண்டு இருக்கிறார். நாங்கள் வாஜ்பாய் உடன் கூட்டணி வைத்தோமே தவிர அடகு வைக்கவில்லை. திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது, திமுக கலைஞரிடம் தான் இருந்தது. ஆனால் இப்போது அதிமுக அவர்கள் கையில் இல்லை. அமித் ஷா கையில் இருக்கிறார் என்றார்.

இதையும் படிக்க : தேர்தலுக்குப் பின் விஜய்யுடன் பாஜக கூட்டணி.. NDA ஆட்சி அமையும்.. ராம்தாஸ் அத்வாலே உறுதி!!

கரூரில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

 

மேலும் பேசிய. அவர், தொகுதி பங்கீடு கூட எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று அமித் ஷாவிடம் கலந்து பேசிவிட்டு தான் செய்கிறார். அதிமுக பாஜகவின் பிடியில் இருக்கிறது. தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியை பஜக விழுங்கி விடும் என்றும் தெரிவித்தார். இருவரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து வருவது மக்களிடையே பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிக்க : எம்எல்ஏ பதவியில் 9 முறை… அமைச்சர் பதவியில் 6 முறை… அருப்புக்கோட்டையில் வெற்றியை பறைசாற்றுவாரா கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!

மேலும் பேசிய அவர்,  முதல்வர் மு.க,ஸ்டாலின், பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு வஞ்சனை செய்தார்கள். அவர்கள் சம்பளம் வாங்குவதைக்கூட கிண்டல் செய்து பழனிசாமியே பேசினார். ஆனால், நான் முதல்வரானதும்  முறையாக கமிட்டி போட்டு, அரசு ஊழியர்கள் 22 ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருந்த கோரிக்கையை, ஒரே கையெழுத்தில் நிறைவேற்றியவன்தான் இந்த ஸ்டாலின். அன்றைக்கு அரசு ஊழியர்கள் என்னைக் கோட்டையில் சந்தித்து, தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்த காட்சி, தமிழ்நாட்டு வரலாற்றில் யாரும் பார்த்திடாத காட்சி என்று பேசினார்.

Follow Us