அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமான முக்கிய புள்ளிகள்… வகித்த – வகிக்கும் பதவிகள்.. முழு விவரம்!
AIADMK And DMK : அதிமுகவில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த அரசியல் பிரமுகர்கள் யார். அவர்கள் அதிமுக மற்றும் திமுகவில் வகித்த மற்றும் வகித்து வரும் பதவிகள் குறித்து இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம் .
தமிழகத்தில் அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்த பல்வேறு நபர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். அவர்கள் யார் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க: பாமகவில் 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு… செளமியா அன்புமணிக்கு எதிராக சரவணன் போட்டி!
எ.வ. வேலு: எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தில் இருந்த இவர். 1972-இல் அதிமுகவில் இணைந்து 1984-இல் தண்டராம்பட்டு தொகுதி எம்எல்ஏ ஆனார். பின்னர், 1995இல் திமுகவில் இணைந்து 5 முறை எம் எல் ஏ, 2 முறை அமைச்சர், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலர் ஆகிய பொறுப்பில் இருந்து வருகிறார்.




ஜெகத்ரட்சகன்: அதிமுக சார்பில் 1980- இல் எம்எல்ஏ-ஆன ஜெகத்ரட்சகன் 1984- இல் லோக்சபா எம் பி ஆனார். பின்னர், 1999- இல் திமுகவில் இணைந்து மத்திய அமைச்சராக பதவி வகித்தார்.
சாத்தூர் ராமச்சந்திரன்: எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் 1980- 1988-இல் பொதுப்பணி, கூட்டுறவு இரு துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் 2001- இல் திமுகவில் இணைந்து இரு முறை அமைச்சர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்தார்.
அனிதா ராதாகிருஷ்ணன்: திமுக சார்பில் இருமுறை எம்எல்ஏ, இருமுறை அமைச்சராக இருந்த அவர், 2009-இல் திமுகவில் இணைந்து 4 முறை எம்எல்ஏ, இருமுறை அமைச்சராகவும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார்.
முத்துசாமி: எம்ஜிஆர் ஆட்சியில் 3 முறை எம்எல்ஏ, ஒரு முறை அமைச்சர். ஜெயலலிதா ஆட்சியில் ஒருமுறை அமைச்சராக இருந்த முத்துசாமி, 2010- இல் திமுகவில் இணைந்து, அமைச்சராகவும் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.
சேகர் பாபு: அதிமுக சார்பில் இரு முறை எம்எல்ஏவாக இருந்த சேகர் பாபு 2011- இல் திமுகவில் இணைந்து, 2021-இல் அமைச்சராகவும், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.
ரகுபதி: அதிமுக சார்பில் 1991- இல் திருமயம் எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்த அவர், 1996- இல் திமுகவில் இணைந்து எம்பி ஆனதுடன் மத்திய இணையமைச்சர், 2021- இல் சட்டத்துறை அமைச்சராகவும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.
ராஜ கண்ணப்பன்: அதிமுகவில் 1991-96 ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்த அவர் திமுக கூட்டணியில் இணைந்து எம்எல்ஏ ஆனார். 2009- இல் அதிமுகவில் சேர்ந்தார். மீண்டும் 2019- இல் திமுகவில் இணைந்து, 2021 முதல் அமைச்சராக இருந்து வருகிறார்.
செந்தில் பாலாஜி: அதிமுகவில் இணைந்த அவர் 2006- இல் எம்எல்ஏ, 2011-இல் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளராக பதவி வகித்ததுடன், 2018-இல் திமுகவில் இணைந்து, 2021- இல் அமைச்சராக இருந்தார்.
தங்க தமிழ்ச்செல்வன்: அதிமுக சார்பில் ஆண்டிப்பட்டி எம்எல்ஏ ஆன இவர், இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட தனது பதவியை ராஜினாமா செய்தார். இருமுறை எம்எல்ஏ பதவி பெற்ற அவர் 2019-இல் திமுகவில் இணைந்தார், 2024 லோக் லோக்சபா எம்பி ஆனார்
வைத்திலிங்கம்: அதிமுகவில் இரு முறை அமைச்சர் பதவி, 2017 முதல் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆக இருந்த வைத்திலிங்கம் 2026 திமுகவில் இணைந்தார்.
மனோஜ் பாண்டியன்: அதிமுக முன்னாள் சபாநாயகர் பி. எச். பாண்டியனின் மகனான இவர், 1993 அதிமுகவில் இணைந்தார். இருமுறை எம்எல்ஏ பதவி, ராஜ்யசபா எம்பியாக இருந்துவிட்டு 2025-ல் திமுகவில் இணைந்தார்.
பன்னீர்செல்வம்: 1973- இல் அதிமுகவில் இணைந்த இவர் எம்எல்ஏ, மாவட்ட செயலாளர், அமைச்சர், முதல் அமைச்சர் என்பன உள்ளிட்ட பதவியில் இருந்த இவர் 2026- இல் திமுகவில் இணைந்தார். இதே போல, மைத்ரேயன், அன்வர் ராஜா, நிலோபர் கபில், ஆறு குட்டி லட்சுமணன், செல்வகணபதி, பழனியப்பன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர்.
மேலும் படிக்க: புதிய தமிழகம் கட்சியின் 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் யார்.. யார்.. 3-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு!