AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக தேர்தல் அறிக்கையை பார்த்து எடப்பாடி புலம்புகிறார்… முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

CM M.K. Stalin Speech : சட்டமன்ற தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளை பார்த்து எடப்பாடி கே. பழனிசாமி புலம்பி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார் .

திமுக தேர்தல் அறிக்கையை பார்த்து எடப்பாடி புலம்புகிறார்… முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!
திருவாரூரில் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 31 Mar 2026 19:40 PM IST

திருவாரூரில் திமுகவின் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதல் அமைச்சருமான மு. க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. நான் திருவாரூர் மண்ணின் மைந்தன். தலைவர் கலைஞரின் மகன். உங்களால் உருவாக்கப்பட்ட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அன்போடும், உரிமையோடும், கேட்கிறேன். திமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். திருவாரூரில் 11 ஆண்டுகள் ஓடாமல் இருந்த ஆழித் தேரை ஓட வைத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி. திருவாரூர் மாவட்டத்தை உருவாக்கியவர் கருணாநிதி. திருவாரூர் மாவட்டம் முழுவதும் குடிநீர் வசதி, புதிய ரயில் சேவை, திருப்பூர்- திருப்பதிக்கு ரயில் சேவை, திமுக ஆட்சியில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளுக்கு ஏராளமான திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சியில் சீரழிக்கப்பட்ட நித நிலை சீரமைப்பு

அதிமுக ஆட்சியில் சீரழிக்கப்பட்ட நிதி நிலையை சீரமைத்தோம். தமிழகத்தை பார்த்து பல்வேறு மாநிலங்களில் உரிமைத் தொகை வழங்கத் தொடங்கியுள்ளனர். மத்திய அரசு முட்டுக்கட்டை போட நினைத்த மகளிர் உரிமைக்காக திட்டத்திற்கு முன்னதாகவே கோடைகால சிறப்பு தொகையும் சேர்த்து ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி பல்வேறு போலி செய்திகளை பரப்பி வருகிறது. திமுக ஆட்சியில் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 கூப்பன் வழங்கப்பட உள்ளது. இதில், டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோ ஓவன், மின்சார அடுப்பு ஆகியவற்றை புதிதாகவோ அல்லது எக்சேஞ்ச் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க: R.P.Udayakumar Tamil Nadu Election: திருமங்கலம் தொகுதியில் வெற்றிக் கனியை பறிப்பாரா ஆர்.பி.உதயகுமார்!

தமிழகத்தை தலை குனிய வைத்த அதிமுக

தமிழகத்தை தலை குனிய வைத்த அதிமுக பாஜகவிடம் கூட்டணி வைத்துள்ளது. பாஜகவின் கிளை செயலாளராக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாறி உள்ளார். திமுக தேர்தல் அறிக்கையை பார்த்து புலம்ப தொடங்கியுள்ளார். அதிமுகவின் திட்டங்களை காப்பியடித்து விட்டதாக புலம்பி வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு எந்த புரிதலும் இல்லை. பாஜகவின் கிளைச் செயலாளராக பழனிசாமி மாறிவிட்டார். அந்த அளவுக்கு பழனிச்சாமியை மிரட்டி அடிமை கூட்டணியில் பாஜக வைத்துள்ளது. திராவிட மாடல் அரசு ஏற்படுத்தியுள்ள தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதை பாஜகவின் நோக்கமாகும்.

தமிழ்நாடு- டெல்லி அணிக்கான தேர்தல்

இந்த தேர்தலானது தமிழ்நாடு அணி மற்றும் டெல்லி அணைக்கான தேர்தலாகும். தமிழகத்தை காக்க திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். தமிழகம் கலவர பூமியாக மாறாமல் இருக்க வேண்டுமென்றால் பாஜக அதிமுக கூட்டணியே வேரோடு வீழ்த்த வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது… எடப்பாடி கே.பழனிசாமி!

Follow Us