R.P.Udayakumar Tamil Nadu Election: திருமங்கலம் தொகுதியில் வெற்றிக் கனியை பறிப்பாரா ஆர்.பி.உதயகுமார்!
Tamil Nadu Elections 2026 : அதிமுகவில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்து வரும் ஆர். பி. உதயகுமார் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் வெற்றியை பதிவு செய்து அமைச்சர் என்ற அடையாளத்துடன் வலம் வருவாரா. தொகுதி நிலவரம் எவ்வாறு உள்ளது.
அதிமுகவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவும் ஆக இருந்து வருபவர் ஆர். பி. உதயகுமார். இவர், கடந்த 1973- ஆம் ஆண்டு ஏப்ரல் 10- தேதி ஆர். போஸ்- மீனாள் அம்பாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். அரசியல் ஈடுபாடு காரணமாகவும், அதிமுகவில் இணைய வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாகவும் அந்தக் கட்சியில் இணைந்து கட்சி பணியாற்றினார். கட்சியில் படிப்படியாக உயர்ந்து வந்த ஆர். பி. உதயகுமார், 2011- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அந்த தொகுதியில் அமோகமாக வெற்றி பெற்ற ஆர். பி. உதயகுமார் எம். எல். ஏ. என்னும் அடையாளத்துடன் சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்தார். பின்னர், 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் மாறி போட்டியிட்டார்.
அமைச்சர் பொறுப்பில் ஆர். பி. உதயகுமார்
அந்த தொகுதியிலும் தனக்கான வெற்றியை பதிவு செய்தார். மேலும், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் களம் இறங்கிய ஆர். பி. உதயகுமார் மீண்டும் வெற்றியை நிலை நிறுத்தினார். இதனிடையே, கடந்த 2011- ஆம் ஆண்டு சாத்தூர் தொகுதியில் எம். எல். ஏவாக வெற்றி பெற்ற ஆர். பி. உதயகுமாருக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆர். பி. உதயகுமாருக்கு வருவாய்த்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.




திருமங்கலம் தொகுதியில் அபார வெற்றி
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் சாத்தூர் தொகுதியில் களமிறங்கிய ஆர். பி. உதயகுமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி வெற்றியை நிலை நிறுத்தினார். இதே போல, 2016 சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட உதயகுமார் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆர். ஜெயராமை வீழ்த்தி 95,864 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதேபோல, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட ஆர். பி. உதயகுமார் தன்னை எதிர்த்து களம் கண்ட திமுக வேட்பாளர் மணிமாறனை வீழ்த்தி 14,087 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
மீண்டும் எம்எல்ஏ அடையாளத்துடன் சட்டமன்றத்தில் நுழைவாரா
தற்போது, சட்டமன்றத்தின் அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்து வருகிறார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திருமங்கலம் தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் அவருக்கு வெற்றி வாய்ப்பு எளிதில் கிட்டும் என்று கட்சி வட்டாரத்தினர் தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சியை வேட்பாளரின் பலனை பொறுத்து தேர்தல் களம் மாறுபடவும் வாய்ப்புகள் உள்ளன. இதனை தேர்தல் முடிவுகளை இறுதி செய்யும்.
மேலும் படிக்க: O.S. Manian Tamil Nadu Election: வேதாரண்யம் தொகுதியில் மீண்டும் கோலோச்சுவாரா ஓ.எஸ்.மணியன்!