புதிய தமிழகம் கட்சியின் 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் யார்.. யார்.. 3-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு!
Puthiya Tamilagam Katchi: புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடக்கூடிய 27 பேர் அடங்கிய 2- ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அந்தக் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டார். 3- ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடும தேதியையும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்தும், தனித்தும் களம் காண உள்ளன. இதில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் முடிவில் இருந்த புதிய தமிழகம் கட்சி கூடுதல் தொகுதிகள் கேட்டிருந்தது. ஆனால், அவ்வளவு தொகுதிகள் வழங்க முடியாது என்று அதிமுக தலைமை கூறியதாக தெரிகிறது. இதனால், அதிமுகவுடனான கூட்டணியை தவிர்த்த புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடுவதாகவும் முதல் கட்டமாக 100 வேட்பாளர்கள் தயாராக இருப்பதாகவும் அந்த கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்து இருந்தார். அதன்படி, புதிய தமிழகம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 27 பேர் அடங்கிய 2- ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ளார். அதில்,
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது… எடப்பாடி கே.பழனிசாமி!
புதிய தமிழகம் கட்சியின் 2- ஆம் கட்ட வேட்பாளர்கள்
- ராஜபாளையம் தொகுதி- வழக்கறிஞர் மு. ரமாதேவி.
- சிவகாசி தொகுதி- க. காளீஸ்வரி.
- அருப்புக்கோட்டை தொகுதி- கி. ரகுபதி.
- திருச்சுழி தொகுதி- கு. குணசேகரன்.
- தூத்துக்குடி தொகுதி- ரா. ரமேஷ்.
- முதுகுளத்தூர் தொகுதி- மலைச்செல்வம்.
- திருவாடனை தொகுதி. சிவ. பாலுசாமி.
- திருவையாறு தொகுதி- வேணு.
- தாராபுரம் தொகுதி- மா. சின்னசாமி.
- திண்டுக்கல் தொகுதி- மா. பிரதீப் பாண்டியன்.
- ஆலங்குளம் தொகுதி- அ. உதயகுமார்.
- பெரம்பலூர் தொகுதி- த. வெங்கடேசன்.
- அந்தியூர் தொகுதி- தா. பெரியசாமி.
- பல்லாவரம் தொகுதி- தங்கராஜ்.
- ஆலந்தூர் தொகுதி- வேலுச்சாமி.
- பழனி தொகுதி- கு. வாய்க்கால் துரை.
- லால்குடி தொகுதி- இளஞ்செழியன்.
- மணச்சநல்லூர் தொகுதி- பாலு.
- ஸ்ரீரங்கம் தொகுதி- நியூட்டன்.
- திருச்சி மேற்கு தொகுதி- கோ. சண்முகம்.
- துறையூர் தொகுதி- ராஜமாணிக்கம்.
- கே. வி. குப்பம் தொகுதி- கந்தன்.
- மடத்துக்குளம் தொகுதி- செந்தில்குமார்.
- அணைக்கட்டு தொகுதி- ஜெயசீலன்.
- திருப்பரங்குன்றம் தொகுதி- சேதுராமன்.
- நத்தம் தொகுதி- ஸ்ரீ விஜயகுமார்.
- திருச்சி கிழக்கு தொகுதி- கௌசல்யா. ஆகிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நாளை 3- ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
இந்த வேட்பாளர்கள் அனைவரும் வருகிற ஏப்ரல் 6- ஆம் தேதி ( திங்கள்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சி வெற்றி பெறும். வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் குறித்து புதிய தமிழகம் கட்சி கணக்கெடுத்துள்ளது. எனவே, வருகின்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் களமாடுவார்கள். 3- ஆவது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் ஏப்ரல் 2- ஆம் தேதி வெளியிடப்படும். கூடுதலாக 10 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.




மேலும் படிக்க திமுக தூண்டுதலால் என் மீது பாலியல் புகார்… அந்த பெண் அக்கா மாதிரி…பூந்தமல்லி தவெக வேட்பாளர் பரபரப்பு பேட்டி!