AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேர்தலுக்குப் பின் விஜய்யுடன் பாஜக கூட்டணி.. NDA ஆட்சி அமையும்.. ராம்தாஸ் அத்வாலே உறுதி!!

Tamilnadu Assembly Election: அப்போது அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் சூழல் மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) குறித்த அதிரடியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அரசியலில் நடிகர் விஜய் களமிறங்குவது ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

தேர்தலுக்குப் பின் விஜய்யுடன் பாஜக கூட்டணி.. NDA ஆட்சி அமையும்.. ராம்தாஸ் அத்வாலே உறுதி!!
ராம்தாஸ் அத்வாலே
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 01 Apr 2026 12:07 PM IST

Tamilnadu Polls 2026: தமிழகத்தில் வரும் ஏப்.23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல, 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களை ஆதரித்து தேசியத் தலைவர்கள், கூட்டணி கட்சியின் தலைவர்கள் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணியை ஆதரித்து அந்தக் கூட்டணியில் தேசிய அளவில் இடம் பெற்றிருக்கும் இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே நேற்றைய தினம் புதுச்சேரி வருகைத் தந்தார்.

இதையும் படிக்க: திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது… எடப்பாடி கே.பழனிசாமி!

விஜய் குறித்து பாஜகவின் பார்வை:

அப்போது அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் சூழல் மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) குறித்த அதிரடியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தமிழக அரசியலில் நடிகர் விஜய் தனது சொந்த கட்சியான ‘தமிழக வெற்றிக் கழகம்’ மூலம் களமிறங்குவது ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். விஜய் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவது தேர்தலில் ஒரு சுவாரஸ்யமான சூழலை உருவாக்கியுள்ளதாக கூறினார். குறிப்பாக இந்த சந்திப்பில் அவர் வெளியிட்ட மிக முக்கியமான தகவல் என்னவென்றால், தேர்தலுக்குப் பிறகு விஜயுடன் இணைந்து ஆட்சி அமைக்க பாஜக தயாராக உள்ளது என்பதுதான்.

விஜய்யிடம் பேசி ஆதரவு கோருவோம்:

இது குறித்து அவர் கூறும்போது, தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனது கூட்டணிக் கட்சிகளுடன் பலமாகப் போட்டியிடும். எனினும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்கள் கிடைக்காத பட்சத்தில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவைப் பெற பாஜக முயற்சிக்கும். விஜய்யுடன் பேசி, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சியை அமைக்கும் என்று அவர் கூறினார்.

ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தைகள்?

பாஜக ஏற்கனவே விஜய்யுடன் கூட்டணி குறித்து சில முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும், ஆனால் தேர்தலுக்கு முன்பாக அது கைகூடவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தேர்தலுக்கு முன்பாகக் கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், தற்போது ‘தேர்தலுக்குப் பிந்தையக் கூட்டணி’ என்ற புதிய வியூகத்தை பாஜக கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க: “அரசியலில் விஜயகாந்த், கமல்ஹாசன் வரிசையில் விஜய்யும் வீழ்ச்சி அடைவார்”.. பியூஸ் கோயல் விமர்சனம்!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என்று உறுதியாக உள்ள பாஜகவுக்கு, விஜய்யின் வருகை ஒரு வாய்ப்பாகத் தெரிகிறது. எனினும், விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிறகு இந்த ‘மெகா கூட்டணி’ அமையுமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us