AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பச்சை பொய் பழனிசாமி ஆட்சியில் தமிழகம் சீரழிந்திருந்தது… முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

Chief Minister MK Stalin: பச்சை பொய் கூறி வரும் எடப்பாடி கே. பழனிசாமி ஆட்சியில் தமிழகம் பல்வேறு வகைகளில் சீரழிந்து இருந்ததாக கடலூர் பொதுக் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து பேசினார்.

பச்சை பொய் பழனிசாமி ஆட்சியில் தமிழகம் சீரழிந்திருந்தது… முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!
எடப்பாடி ஆட்சியில் தமிழகம் சீரழிந்திருந்தது
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 07 Apr 2026 21:04 PM IST

கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் பகுதியில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நாசம் செய்யப்பட்ட நிர்வாகத்தையும், நிதி நிலைமையும் திமுக அரசு சரி செய்துள்ளது. அத்துடன் தமிழகத்தின் பொருளாதார நிலைமையை 11 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. திராவிட மாடல் 2.0 திட்டத்திற்கு நாங்கள் தயாராக உள்ளோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளில் மகளிர் விடியல் பேருந்துக்கு முதல் கையெழுத்து போட்டவன் தான் இந்த ஸ்டாலின். தமிழகத்தை பின்பற்றி மற்ற மாநிலங்களிலும் மகளிர்க்கு கட்டணம் இல்லா பேருந்து பயணத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டங்களை நிறைவேற்றும் திராணி திமுகவிடமே உள்ளது

2016 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் வயதானவர்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம் வழங்கப்படும் என்று அதிமுக கூறியது. ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்டத்தை அவர்கள் செயல்படுத்தவில்லை. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் திராணி திமுகவிடம் மட்டுமே உள்ளது. அதிமுக பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் திட்டம் நிறுத்தம் செய்யப்படும். தமிழை அழிப்பதற்கான மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படும்.

மேலும் படிக்க: M.H. Jawahirullah Tamil Nadu Election: 3 முறை தொகுதி மாறி போட்டியிட்ட எம்.ஹெச்.ஜவாஹிருல்லா… நாகை தொகுதியில் வெற்றியை தக்க வைப்பாரா!

பாஜகவின் முயற்சிகளை முறியடிக்கும் திமுக அரசு

மாநில அரசை மக்கள் தேர்ந்தெடுப்பதை தடுப்பதற்காகவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அறிமுகப்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அடுத்தவர்களின் உழைப்பையும், வரிப்பணத்தையும் சுரண்டும் திட்டம்தான் ஜிஎஸ்டி திட்டமாகும். தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தையும், அதிகாரத்தையும் குறைக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. இது போன்ற பல்வேறு திட்டங்களை கையில் வைத்திருக்கும் பாஜகவின் முயற்சிகளை முறியடிக்கும் அரசாக திமுக அரசு உள்ளது.

அதிமுக ஆட்சியில் போதைப் பொருள் கலாச்சாரம் அதிகரித்தது

பச்சை பொய் கூறும் பழனிசாமி ஆட்சியில் தமிழகம் பல்வேறு வகையில் சீரழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் தொடங்க வந்த நிறுவனங்கள் அனைத்தும் வெளிமாநிலங்களை தேடி ஓடி விட்டன. தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்தது அதிமுக ஆட்சியில் தான். திமுக ஆட்சியில் கடலூர் மாவட்டத்தில் கொண்டுவரப்பட்ட இடங்கள் பின்வருமாறு:

  • சிதம்பரம் புதிய பேருந்து நிலையம்.
  • சுற்றுலா மைய மேம்பாட்டு பணிகள்.
  • கெடிலம் ஆற்றுக்கு மேல் உயிர் உயர்மட்ட பாலம்.
  • சிதம்பரம் கூட்டு குடிநீர் திட்டம்.
  • அரிவாள் மூக்கு பகுதியில் வெள்ள நீர் கடலில் கலப்பதை தடுக்க புதிய கால்வாய்.
  • குறிஞ்சிப்பாடியில் பெருமாள் ஏரி தூர்வாரம் பணி.
  • திட்டக்குடியில் புதிய கால்நடை தீவன ஆலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இதே போன்று எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டு பேச வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. அன்புமணியின் சூறாவளி சுற்றுப்பயணம்..

Follow Us