AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

M.H. Jawahirullah Tamil Nadu Election: 3 முறை தொகுதி மாறி போட்டியிட்ட எம்.ஹெச்.ஜவாஹிருல்லா… நாகை தொகுதியில் வெற்றியை தக்க வைப்பாரா!

Tamil Nadu Elections 2026: திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம். ஹெச். ஜவாஹிருல்லா வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ பதவியை தக்க வைத்துக்கொள்வாரா.

Gowtham Kannan
Gowtham Kannan | Published: 07 Apr 2026 19:35 PM IST
தமிழகத்தில்  மனித நேய  மக்கள் கட்சியின் தலைவராக இருந்து வருபவர்  எம். ஹெச். ஜவாஹிருல்லா. இவர், கடந்த 1952- ஆம் ஆண்டு ஜூலை 22- ஆம் தேதி ஹிதயத்துல்லா என்பவருக்கு மகனாக பிறந்தார். கல்லூரி படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் விரிவுரையாளராக பணி புரிந்து வந்தார். பின்னர், விரிவுரையாளர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஜவாஹிருல்லா சமூக நீதி,  சிறுபான்மையினர்  உரிமை மற்றும் மத நல்லிணக்கத்துக்காக  பாடுபட்டு வந்த இவர்  பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

1 / 5
திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில்  அங்கம் வகித்து வரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்  எம்.ஹெச்.  ஜவாஹிருல்லா  கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில்  ராமநாதபுரம் தொகுதியில்  வேட்பாளராக களம் இறக்கப்பட்டு  தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.  அத்துடன்  எம். எல். ஏ. வாக  தேர்வாகி  சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்தார்.  பின்னர்,2021  சட்டமன்ற தேர்தலில்  தஞ்சாவூர் மாவட்டம்,  பாபநாசம் சட்டமன்ற தொகுதியில்  திமுக கூட்டணி  கட்சியின் வேட்பாளராக  களம் இறக்கப்பட்ட  ஜவாஹிருல்லா 2-  ஆவது முறையாக  வெற்றி பெற்று  எம்எல்ஏ பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

2 / 5
தமிழ்நாடு முஸ்லிம்  முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்து வரும் இவர் 2016  சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், சமூக செயல்பாடுகள் மற்றும் பெரிய அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதன் மூலம்  அவரது கட்சியின் செல்வாக்கை தொடர்ந்து வளர்த்தார்.  தற்போது,  வருகிற சட்டமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியின்  வேட்பாளராக  ஜவாஹிருல்லா  அறிவிக்கப்பட்டுள்ளார்.

3 / 5
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில்  ராமநாதபுரம்  சட்டமன்ற தொகுதியில்  போட்டியிட்ட எம். ஹெச். ஜவாஹிருல்லா  இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஹசன் அலியே தோற்கடித்து  83 ஆயிரத்து 161 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதேபோல, 2016 சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் களமிறங்கிய ஜவாஹிருல்லா  அதிமுக வேட்பாளர் முனைவர் மணிகண்டன் இடம்  56 ஆயிரத்து 143 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

4 / 5
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில்  பாபநாசம் தொகுதியில் மாறி போட்டியிட்ட ஜவாஹிருல்லா தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கோபிநாதனை வீழ்த்தி 86 ஆயிரத்து 567 வாக்குகள் (  44.22%)  வாக்குகள் பெற்று  வெற்றியை தன தாக்கி கொண்டார்.  வருகின்ற சட்டமன்ற தேர்தலில்  நாகப்பட்டினம் தொகுதியில்  களம் காணும் ஜவாஹிருல்லாவுக்கு  தேர்தல்  களம்  சாதகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும். வெற்றி வாய்ப்பு தீர்மானிக்கும் இறுதி முடிவ அந்தத் தொகுதி மக்களின் கைகளில் தான் உள்ளது.

5 / 5
Follow Us