AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. அன்புமணியின் சூறாவளி சுற்றுப்பயணம்..

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இரண்டு நாட்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியைப் பொருத்தவரையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் கிட்டத்தட்ட 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களை ஆதரித்து அன்புமணி தரப்பில் தொடர்ந்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. அன்புமணியின் சூறாவளி சுற்றுப்பயணம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Apr 2026 20:10 PM IST

சென்னை, ஏப்ரல் 7, 2026: சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தில் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் மும்முரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரையில், தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் கட்சி, அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் இடையே நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. இதில், அதிமுக இந்த முறை எப்படியாவது ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. எனவே, அக்கட்சியின் தலைவர்கள் அனைவரும் மும்முரமாக தொடர்ச்சியான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கியமாக, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இரண்டு நாட்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியைப் பொருத்தவரையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் கிட்டத்தட்ட 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: கருணாநிதி வீட்டு சிறை விவகாரம்… அதிமுக ஆட்சியில் சட்ட ரீதியான நடவடிக்கை… எடப்பாடி பழனிசாமி உறுதி!

அன்புமணியின் பிரச்சார பயணம்:

அதனைத் தொடர்ந்து, வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களை ஆதரித்து அன்புமணி தரப்பில் தொடர்ந்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், நாளையும் நாளை மறுநாளும் ஆகிய இரண்டு நாட்கள் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

மேலும் படிக்க: எடப்பாடியில் தவெக வாஷ் அவுட்… வேட்பாளர் மாயம்… வேட்புமனு நிராகரிப்பு… என்ன காரணம்!

ஏப்ரல் 8ஆம் தேதி, நாளை மாலை 4 மணிக்கு ஆற்காடு, மாலை 6 மணிக்கு சோழிங்கர், இரவு 8 மணிக்கு ஆர்.கே. பேட்டை (திருத்தணி தொகுதி) உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 9ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஆரணி, மாலை 6 மணிக்கு போளூர், இரவு 8 மணிக்கு கலசப்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகளில் அவர் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

அதிமுக கூட்டணியில் வழங்கப்பட்டுள்ள 18 இடங்களில் பெரும்பாலானவற்றில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பாமக தரப்பில் மும்முரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Follow Us