AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் இல்லையா? ஹெச். ராஜா கொடுத்த ட்விஸ்ட்.. என்ன மேட்டர்?

Tamil Nadu NDA CM Candidate : தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக நாடாளுமன்ற குழு தான் முடிவு செய்யும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய நிலையில், ஹெச். ராஜா இதுபோன்ற கருத்தை கூறியுள்ளார்.

முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் இல்லையா? ஹெச். ராஜா கொடுத்த ட்விஸ்ட்.. என்ன மேட்டர்?
எடப்பாடி பழனிசாமி - ஹெச்.ராஜா
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 28 Jun 2025 17:16 PM IST

சென்னை, ஜூன் 28 :  தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக நாடாளுமன்ற குழு தான் முடிவு செய்யும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா (H Raja) தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA Alliance) முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi  Palanisamy) தான் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய நிலையில், ஹெச். ராஜா இதுபோன்ற கருத்தை கூறியுள்ளார். இதனால், அதிமுக பாஜக இடையே குழப்பமான சூழல் நிலவி வருகிறது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளுக்கு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, கூட்டணி சலசலப்புகளும் நடந்து வருகிறது. இதில், நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.

முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் இல்லையா?

கூட்டணி அமைந்தாலும், இதில் சில குழப்பங்கள் நீடித்து வருகிறது. அதாவது, தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி வருகிறது. ஆனால், எடப்பா பழனிசாமியோ, அதிமுக ஆட்சி அமையும் என கூறி வருகிறார்.

இதனை மீண்டும் அமித் ஷா திட்டவட்டமாக கூறி இருக்கிறார். 2025 ஜூன் 27ஆம் தேதியான நேற்று நாளிதழுக்கு ஒன்று பேட்டி அளித்த அமித் ஷா, தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என தெரிவித்தார். முதல்வர் வேட்பாளர் குறித்து பேசிய அவர், அதிமுகவை சேர்ந்தவர்களே முதல்வர் வேட்பாளர் என தெரிவித்தார்.

ஹெச். ராஜா சொன்ன விஷயம்

இதில், எடப்பாடி பழனிசாமி பெயரை அமித் ஷா தவிர்த்துள்ளார். இது அதிமுக பாஜக இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்  கூறியிருக்கிறார்.

இப்படியான சூழலில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக நாடாளுமன்ற குழு தான் முடிவு செய்யும் என தெரிவித்தார். இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசுகையில், ”35 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை தலைவர்கள் முடிவு செய்வார்கள். நாடாளுமன்ற குழு முடிவு செய்யும். மீண்டும் மீண்டும் வீட்டு ஜன்னலில் எட்டி பார்க்கதீர்கள். அது அநாகரீகம். பக்கத்து வீட்டு ஜன்னலை எட்டிப் பார்க்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமியே கூறி விட்டார். எங்கள் கூட்டணியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.

அதிமுக பாஜக கூட்டணி குறித்து முடிவு செய்வது நாடாளுமன்ற குழு தான். ஏற்கனவே அமித் ஷா கூறிவிட்டார். எப்படி, டெல்லிக்கு பிரதமர் மோடி இருக்கிறார்களோ, அதே போல, தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தான் என்று கூறிவிட்டார். ஆனால், இதுபற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது. என்னுடைய வரம்பு மாநிலத்திற்கு உட்பட்டது. எங்கள் ஒவ்வொரு தொண்டரும் அகில இந்தியா தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள்” என கூறினார்

Follow Us